டிங்கி மற்றும் பிங்கி

************************

     டிங்கி மற்றும் பிங்கி இருவரும் மிக சிறந்த நண்பர்கள். இருவரும் வேலைத் தேடி அலைந்தனர். அங்கு ஒரு ஊரில் ஒரு வணிகரிடம் சென்று வேலை கேட்டனர். அப்பொழுது அந்த வணிகர் ஒரு சிறிய வேலையை முடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

      தனது தோட்டத்திற்கு சென்று அங்கு உள்ள ஒரு கிணற்றைக் காட்டி, அதில் இருந்து கரும்புக் கூடையைக் கொண்டு நீரினைக் கிணற்றில் இருந்து எடுத்து அருகில் உள்ள தோட்டத்திற்கு அந்தி வரை நீர் இறைகும்படி கேட்டுக்கொண்டார்.

    அதன் பின் பிங்கி கரும்புக் கூடையினால் நீர் இறைத்து ஊற்றுவது கடினம் என்பதால் படுத்து தூங்கிவிட்டான். டிங்கியோ கொடுத்த வேலையைத் தொடர்ந்து அந்தி வரை செய்து கொண்டு இருக்கும்பொழுது கூடையில் தங்கம் நாநாயங்கள் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். மேலும் அந்த நாணயங்கள் அனைத்தையும் அவ்வணிகரிடம் கொண்டு கொடுத்து நன்மதிப்பைப் பெற்றான்.

   மேலும் அவ்வணிகர் ஒரு சிறந்த பணியையும் கொடுத்தார்.

     பிங்கியோ தான் தூங்கிய செயலை அறிந்து வெட்கி தலை குனிந்து போனான்.


நீதி:-

******

   விடா முயற்சி வெற்றியைத் தழுவும். கடின உழைப்பு ஒரு போதும் தோல்வியைத் தராது.

Previous Post Next Post