வைட்டமின் டி போலல்லாமல், மனித உடலால் வைட்டமின் சி உற்பத்தி செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாது. அதனால் தான் அதை நல்ல அளவில் உட்கொள்வது அவசியம்.
இந்த ஊட்டச்சத்து சிறிய இரத்த நாளங்கள், எலும்புகள், பற்கள் மற்றும் கொலாஜன் திசுக்களுக்கும் அவசியம்.
உடலின் இயல்பான செயல்பாட்டிற்காகவும், குறைபாட்டின் அபாயத்தைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் 90mg வைட்டமின் சியை எடுத்துக் கொள்ள வேண்டுமென ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பப்பாளி, நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருந்தாலும், ஒரு கப் பப்பாளி 88 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வது அதிகமான அளவில் வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். 100 கிராம் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை எடுத்துக்கொண்டால் அதன் மூலமாக உடலுக்கு 53.2 மில்லி கிராம் முதல் 53 மில்லி கிராம் வரையிலான வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.
கொய்யா : கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது..
இதில் அன்னாச்சியும் ஒன்று, இதில் 79 மில்லி கிராம் அளவுக்கும் அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமையளிக்கிறது.
அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. ஒரு துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. கிவி பழத்தின் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் உள்ளது. மேலும் இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலியல் இடம் பிடிக்கின்றன.
மற்றபடி ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்களிலும் வைட்டமின் சி சத்து கிடைக்கும்.