கவலை கவலை

********************

     ஒரு ஊரில் இருந்த மக்கள், அந்நாட்டு அரசரிடம் சென்று தனது அனைத்து கவலைகளையும் கூறினர். மேலும் இதில் இருந்து விடுபட முடியவில்லை எனவும்  புலம்பினர். இதை கேட்ட அரசன் நான் ஒரு கதை சொல்கிறேன் என்று ஒரு நகைச்சுவை உள்ள கதையை கூறினார். இதை கேட்ட அம்மக்கள் சிரித்தனர். மேலும் அவ்வரசன் இன்னொரு கதை சொல்கிறேன் என்று மறுபடியும் சொன்ன கதையை திருப்பி கூறினார். இதைக் கேட்ட அம்மக்கள் மறுபடியும் சிரித்தார்கள். மறுபடியும் சொன்ன நகைச்சுவைக் கதையை அவ்வரசன் திருப்பிக் கூறினார்.  இதைக் கேட்ட அம்மக்கள் சிரிக்காமல், அரசர் ஏன் சொன்ன கதையை திருப்பி திருப்பி சொல்கிறார் என எண்ணினர். இதை உணர்ந்த அரசர் சொன்ன கதையை திருப்பி திருப்பி கேட்கும்பொழுது சிரிப்பு வராமல் போனது. இதேபோல் இருக்கும் கவலைகளை எதற்காக திருப்பி  திருப்பி நினைக்கிறீர்கள். அனைத்து கவலைகளையும் விட்டு விட்டு, அடுத்து என்ன வேலையோ அதை செய்ய துடங்குங்கள் என்று அவ்வரசன் கூறினார். இதை கேட்ட அம்மக்களும் தனக்கு இருக்கும் கவலைகளை எண்ணுவதை நிறுத்தி, வாழ்க்கையை வாழ துடங்கினர்.


நீதி :-

*****

     இருக்கும் துன்பத்தை நினைத்துக்கொண்டே வாழ்ந்தால், அது சந்தோசமாக வாழும் தருணத்தை இல்லாமல் செய்து விடுகிறது...

Previous Post Next Post