பண்டிட் என்பவர் மிகுந்த புத்திசாலி. மேலும் சில வறுமையின் காரணமாக அவர் அவரது தினசரி உணவிற்கே, மற்றவர்களிடம் கேட்டு கேட்டு வாங்க வேண்டிய நிலை உண்டாயிற்று. மிகுந்த பசியின் காரணமாக, ஒரு வீட்டிற்கு சென்று ஏதாவது கொஞ்சம் உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்கும் தருணத்தில், அந்த வீட்டுக்காரர் உணவு ஒன்றும் கிடையாது என்று கூறி, அவரை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி சொல்லி வீட்டின் கதவை மூடிவிட்டார். இவ்வாறு அவர் நிறைய நாட்கள் சாப்பிடாமல் இருந்தது உண்டு. ஒரு நாள் ஒரு எஜமான், பண்டிட்டிற்கு நல்ல விலை மதிப்பு அதிகம் உள்ள அழகான உடையினை வழங்கினார். அந்த உடையில் அவர் வழக்கம்போல் சென்று உணவினை கேட்கத் துடங்கினார். அப்பொழுது ஒரு நாள் உணவு இல்லை என்று, வெளியே போக சொல்லி கதைவை மூடிய ஒரு நபர், அதே நபர், பண்டிட்டைத் தனது வீட்டிற்கு வர சொல்லி உணவினை அருந்தும்படி கேட்டுக்கொண்டார். பண்டிட் உணவு அருந்தும் தருணத்தில், உணவினை அவரது உடைக்கு கொடுத்து சாப்பிடும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் "உணவினை உடை கூட சாப்பிடுமா?" என்று வினாவினார். இதற்கு இந்த உடையின் காரணமாகவே எனக்கு இன்றைக்கு உணவு கிடைத்து உள்ளது. அதனால் தான் நான் உணவினை இந்த உடைக்குக் கொடுக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட அவ்வீட்டின் உரிமையாளர் வெட்கித் தலை குனிந்தார்.
நீதி :-
******
இனிது இனிது உதவி செய்து வாழ்தல் இனிது.