***********************
குழலி என்றப் பெண் எப்பொழுதும் கடவுள் பக்தி கொண்டு இருப்பவள்.மேலும் தனது ஊரிற்கு யாரேனும் வந்தால் அவர்களுக்கு உணவு அல்லது ஏதேனும் உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பெற்றோர்கள் இவளுக்கு மணி என்ற நபரை திருமணம் முடித்து வைத்தனர்.
மணியோ, குழலிக்கு ஏத்த கணவறாக அமைந்தார். ஒரு நாள் மணிக்கு பெரிய நோய் ஒன்று வந்தது. இதனால் அனைத்து பணமும் செலவாகியது. குழலி இந்நிலையிலும் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை கை விடாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கடவுளிடம் சொல்லி பிரார்த்தனை செய்து வந்தாள்.சில நாட்கள் கழித்து மணியின் உடல்நிலை சரியாகியது.பிறகு இருந்த சிறிய காசுகளைக் கொண்டு கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
ஒரு நாள் கோயில் பூசாரி தன்னிடம் நிறைய தேங்காய்கள் உள்ளன. இதை நீ வைத்துக்கொள் என்று ஒரு தேங்காயினைக் கொடுத்தார். குழலி அதை வாங்கி தன் கடையில் விற்பனைக்கு போட்டு இருந்தால். யாரும் அந்தத் தேங்காயினை வாங்காததால் தானே சமைத்து விடலாம் என்று எண்ணி தேங்காயினை உடைத்து பார்க்கும்போழுது நிறைய பொற்காசுகள் இருந்தன. அதைக் கொண்டு அவர்கள் இருவரும் பழைய நிலைமை போல நன்றாக வாழத் துடங்கினார்.
நீதி :-
***
வாழ்க்கையில் துன்ப காலங்கள் வரும். அப்பொழுது தனது நம்பிக்கையை கை விடாமல் முயற்சித்தால் அந்த நம்பிக்கை நம்மளை கை விடாது.