கூட்டுக் குடும்பம்

*******************


    ஒரு கிராமத்தில் ஒரு கிராமத்தில் உள்ள தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்தனர் அவர்கள் மூவருக்கும் அவர்கள் மூவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர் வந்த வந்த மருமகள்கள் மூவரும் ஒற்றுமையின்மை காரணமாக சொத்தினை பிரித்து தரும்படியும் , பிறகு தனிக்குடித்தனம் செல்வதாகவும் இருந்தனர்.இதனால் மூன்று மகன்களும்  அப்பாவிடம் சென்று சொத்தினை பிரித்து தரும்படி கேட்டனர். அதற்கு தந்தைக்கோ இவர்களது செயலில் துளிகூட உடன்பாடு இல்லை ஏனென்றால் ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது என்பது அவரது ஆசை . அதனால் நன்றாக யோசித்து  நமது காட்டில் புதையல் ஒன்று உள்ளது. இதனை நான் பலமுறை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால் புதையலைத் தேடி கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். இதனால்  இம்மூவரும்  தோட்டத்திற்கு சென்று குழிகள் தோண்டி தேடத் தொடங்கினர்.பிறகு நாட்கள் செல்ல செல்ல அவர்களின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  இறக்க  நேரிட்டது. ஆறு மாத காலத்திற்கு பிறகு அவர்களது அனைத்து தோட்டமும் குழிகள் தோண்டி தேடப்பட்டது. ஆனால் புதையல் கிடைக்கவில்லை. இதனால் அம்மூவரும் "சரி குழிகள் தான் தோண்டி விட்டோம்" "புதையலும் கிடைக்கவில்லை". இதில் நெற்பயிர்களை யாவது  விதைத்து விடலாம் என்று எண்ணினார். பிறகு அவ்வாறே செய்தனர். பிறகு அறுவடை செய்தனர். அப்பொழுது அவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டியது. அப்பொழுதுதான் தெரியவந்தது அந்தப் புதையல் என்னவென்று, பிறகு அனைவரும் ஒற்றுமையாக வாழ தொடங்கினர்.


நீதி :- ஒற்றுமை என்றும் பலமாம்

Previous Post Next Post