நீர் நிறைந்த குளம்

***********************

    நாய் ஒன்றிற்கு மிகுந்த தண்ணீர் தாகம் அடித்தது. இதனால் தண்ணீரை தேடி சென்றது. ஒரு நீர் நிறைந்த குளத்தை கண்டு அங்குள்ள நீரைக் குடிக்கும் போது ஒரு எலும்பு துண்டு நீரில் மிதப்பதை கண்டது. பிறகு எலும்பை ருசி பார்க்க எண்ணியது, ஆனால் எலும்பு துண்டை நெருங்க முடியாமல் தவித்தது. இதனால் குளத்தில் உள்ள நீரைக் குடித்து விட்டால் எலும்புத் துண்டை அடைந்து விடலாம் என முட்டாள் தனமாக எண்ணி அவ்வாறே செய்தது. பிறகு வயிறு முழுக்க  தண்ணீர் நிறைந்து இறந்து விட்டது.

நீதி :-

****

பேராசை பெரும் நஷ்டம்

Previous Post Next Post