ராமு மற்றும் சோமு

**********************

 ஒரு கிராமத்தில் இரண்டு குடும்பங்களுக்கும் அருகிலே வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தது. ராமு மற்றும் சோமு என்று பெயரிட்டனர். ராமுவோ,  அப்பா அம்மாவின் சொற்களைக் கேட்டுத் தட்டாமல் வாழ்ந்து வந்தான்.சோமுவோ அப்பா அம்மாவின் பேச்சை கேட்காமல் ஒழுக்கம் இன்றி வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவ்வூரில் மிதிவண்டி போட்டி வைத்தனர். அதில் சோமு மிக வேகமாக சென்று, ஒரு காரில் மோதி கீழே விழுந்தான். அப்பொழுது ராமு அவனை  எடுத்து மருத்துவமனையில் சேர்த்தான். பிறகு சோமுவால் நடக்க இயலாமல் போனது. அதில் இருந்து தான் ஏன்?  இப்படி அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்காமல் வாழ்ந்து வந்தேன்?  தான் ஏன் ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து வந்தேன்? என்பதை எண்ணி எண்ணி குற்ற உணர்ச்சியில் தன் வாழ்வை வாழ்ந்து வந்தான்.


நீதி :-

****

ஒழுக்கத்துடன் வாழ்பவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

Previous Post Next Post