குருவே, "என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை"என்று குருவிடம் சிஷ்யன் வருத்தப்பட்டான். அதற்கு குரு ஒரு தோட்டத்தைக் காட்டி அங்கு, "நிறைய பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டுள்ளது, அதில் ஏதேனும் ஒன்றினைப் பிடித்து கொண்டு வா " என்று குரு கூறினார்.
அவனும் அவ்வாறே சென்று பட்டாம்பூச்சியினை பிடிக்க முயற்ச்சித்தான், ஆனால் முடியவில்லை. பிறகு குருவிடம் சென்று, தன்னால் முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டான்.
பிறகு அவன் எதைப் பற்றியும் எண்ணாமல் தனதுப் பணியை அமைதியாகத் தன் குருவிற்கு செய்து வந்தான். ஒரு நாள் அவன் தோளில் ஒரு பட்டாம்பூச்சி வந்து அமர்ந்தது. அதை உணர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
மேலும் குருவிடம் சென்று குருவே, "சற்று முன் ஒரு பட்டாம்பூச்சி என் தோளில் வந்து அமர்ந்தது " என்று கூறினான்.
இதைக் கேட்ட குருவோ "ஹா ஹா ஹா " என்று புன்னகைக்கத் துடங்கினார். இது தான் வாழ்க்கை. "நீ, உன் வாழ்க்கையில் சந்தோசத்தை தேடி அலைந்தால், அது கிடைக்க வாய்ப்புகள் அரிது."
"உன் வாழ்க்கையை அமைதியோடு வாழ்ந்து வந்தால் போதும், உனக்கு தேவையான சந்தோசங்கள் வந்தடையும் என்று கூறினார்."
அது முதல் அந்த சிஷ்யன் தன் வாழ்க்கையில் எந்த ஒரு எதிர் பார்ப்பும் இன்றி அமைதியாக வாழ்ந்து வந்தான்.