ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுப்பட்டு, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்தி வந்தார். அவர்
மேலும் ஒரு கழுதை ஒன்றை வைத்து இருந்தார்.
ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போய்விட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் "அடடே, கழுதைக் காணாமல் போய்விட்டதே, இனி என்ன செய்ய போகிறாய்? என்று அந்த விவசாயியிடம் கேட்டனர்".
அதற்கு அவர் "இருக்கட்டும்" என்று பதில் கூறிவிட்டு சென்றார். அடுத்த நாள் அந்த கழுதை தன்னுடன் மற்ற 3 கழுதைகளை கூட்டிக்கொண்டு வந்தது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், "ஆஹா நீ மிக்க அதிர்ஷ்டசாலி உன் கழுதை மற்ற 3 கழுதைகளைக் கூட்டிக் கொண்டு வந்து அல்லவா இருக்கிறது". என்று கூறினார். இதற்க்கு அவர், "இருக்கட்டும், என்று கூறினார் ".
மறுநாள் அவரது மகன் கழுதையை ஒட்டி சென்று கீழே விழுந்து கால் உடைத்துக் கொண்டான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர்," ஆஹா, இனி நீ என்ன செய்யப் போகிறாய் என்றுக் கேட்டனர் ".இதற்கும் அவ்விவசாயி," இருக்கட்டும் என்று கூறினார் ".
பிறகு அந்த ஊரில் போர்க்களம் ஆரம்பித்தது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகன்கள் சென்றாகவேண்டும் என்ற கட்டளை.ஆனால் விவசாயியின் மகனுக்கோ கால் உடைந்ததன் காரணமாக அவர் வீட்டில் இருக்க அனுமதி தரப்பட்டது.
இதை அறிந்த அந்த ஊர் மக்கள் இந்த விவசாயி மிகுந்த அதிர்ஷ்டக்காரன் என்று புகழத் துடங்கினர். இதை அறிந்தும் எதும் பெரிதாக எண்ணாமல் சமமான மன நிலையில் இருந்தார்.
இதற்கு காரணம் உண்டு.நாட்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் நம்மளுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. என்பதை நன்கு உணர்ந்தவன். இது தான் அவனது சமமான மன நிலைக்கு காரணம்.
நீதி :-
நாட்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று எதுவும் கிடையாது.