ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

 

வங்கிகளில் நாம் எவ்வளவோ கணக்கு முறைகளைப் பார்க்கிறோம்.

அதில் ஒன்றுதான் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கு.

பெயரில் உள்ளது போன்றே இக்கணக்கைத் தொடங்க எந்த கட்டணமும் தேவையில்லை.

முக்கியமாக, பிற கணக்குகளைப் போல் இதில் ஏதேனும் டெபாசிட் செய்வதில் அதற்கு வட்டி உண்டு.

இதில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஜீரோ பேலன்ஸ் கணக்கின் மீது ஏற்படும் சேவைக்கட்டணங்களை வங்கிகளே ஏற்கும்.

அதனால் ஒருவர் வழக்கமான வங்கி கணக்கின் எல்லா வசதிகளையும் பெற முடியும்.

இந்த வகை கணக்குகளை பெரும்பாலும், வங்கி கணக்கு இல்லாதவர்கள் மற்றும் கட்டாயம் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே வைத்திருக்கிறார்கள்.

பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இந்த கணக்கு முறை நடைமுறையில் இருப்பினும் தனியார் துறை வங்கிகளில் ஒரு சிலருக்கு மட்டும் இவ்வகை கணக்குத் தொடங்க அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக, ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதை வங்கிகள் மூலம் செலுத்தும் போது, அந்த குறிப்பிட்ட வங்கி, அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வங்கி கணக்கு ஒன்றை தொடங்கி கொடுக்கும்.

இது போன்று நிறுவனங்கள் மூலம் பெறப்படும் வங்கி கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாகவே இருக்கும்.

அதே சமயம், ஒருவர், வேலை செய்யும் நிறுவனம் மூலமாக அல்லாமல், தனியாக சென்று வங்கி கணக்கு தொடங்க நினைத்தால், அதற்கு அனைத்து வகை கட்டணங்களும் உண்டு.

வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதனை average quarterly balance என்பார்கள்.

அதாவது, மூன்று மாத கணக்கை கூட்டி கழித்து பார்த்தால், வங்கிகள் சொல்லும் அளவிற்கு குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் இருந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

காசோலை பெற வேண்டும் என்றால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

இது போன்ற பிரச்னைகள் எதுவும் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இருக்காது.

மற்றொரு புறம், ஒருவர் தன்னுடைய நிறுவனம் மூலம் சம்பள கணக்கை தொடங்கினால், அதில் ஒவ்வொரு மாதமும், அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து சம்பளம் வர வேண்டும்.

3 அல்லது 6 மாதங்கள் சம்பளம் வராமல் இருந்தால், இந்த ஜீரோ போலன்ஸ் கணக்கு, சாதாரண வங்கி கணக்காக மாறிவிடும்.

பின்னர், அதற்கு என்று இருக்கும் அனைத்து கட்டணங்களும் பொருந்தும்.

ஒரு வழக்கமான சேமிப்புக் கணக்கைப் போல, ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு ஏடிஎம் அட்டை, காசோலை, பாஸ் புக் போன்ற வசதிகளும் உள்ளன.

அந்த இலவச ஏடிஎம் அட்டையை உலகளாவிய பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்படலாம்.

ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனை உங்களுடைய ஏடிஎம் கார்டுகளால் மேற்கொள்ளும் பொழுது அந்தக் கார்டு எவ்வித கட்டணமின்றி இலவசமாகின்றது.

Previous Post Next Post