விண்டோஸ் 11 பதிப்பை நான் இன்னும் நிறுவவில்லை. இணைய தளங்களில் வந்த விண்டோஸ் 11 பற்றிய செய்திகளை வைத்து புதிதாக என்னென்ன வசதிகள், மாற்றங்கள் வரவிருக்கின்றன என இந்தப் பதிலை தருகிறேன்.
- Widget
அவ்வப்போது நிலை மாறும் தகவல்களைக் கொண்ட விட்ஜெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை AI தொழிநுட்பத்துடன் இயங்கும் அதே வேளை தனிப்பயனாக்கப்படக் கூடியவையாகவும் இருக்கும்.
செய்தி, வானிலை, காலெண்டர், செய்ய வேண்டிய பட்டியல் மற்றும் உங்கள் சமீபத்திய புகைப்படங்கள் போன்றவற்றைக் காண்பிக்கக்கூடிய புதுப்பிக்கப்பட்ட விட்ஜெட்களை விண்டோஸ் 11 வழங்குகிறது.
ஒரே நேரத்தில் பார்க்க விரும்பினால் விட்ஜெட்களை முழுத்திரையில் காணவும் முடியும். பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் விட்ஜெட்டுகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.
சமீபத்தில் விண்டோஸ் 10 இலும் இந்த செய்தி மற்றும் ஆர்வங்கள் News and Interests டெஸ்க்டாப் விட்ஜெட்களை அறிமுகப்படுத்தியது.
2. Snap Layouts எனும் வசதி வசதி மூலம் சாளரங்களை வேவேறு தல அமைப்புக்களிலிருந்து தேர்வு செய்யக் கூடிய வசதியும் உள்ளது.
ஸ்னாப் தளவமைப்புகள் மூன்று விண்டோக்களை அருகருகே வைப்பது, ஒரு பெரிய விண்டோ இரண்டு விண்டோக்களை பக்கத்தில் அடுக்கி வைப்பது போன்றபலவற்றை உள்ளடக்கியது.
இத்தளவமைப்புகளை டாஸ்க் பார் ஐகான்களிலிருந்து அணுகக்கூடியதாக இருக்கும்.
3. Multiple Desktops
சிறந்த பல்பணி அனுபவம் விண்டோஸ் 11 க்கு புதியது ஒவ்வொரு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் திரைகளைப் பயன் படுத்த முடிவதோடு அவை ஒவ்வொன்றிற்கும் டெஸ்க்டாப்பிற்கும் வேறுபட்ட பின்னணியை அமைக்கும் திறனும் உள்ளது.
பயனர்கள் தனித்தனி டெஸ்க்டாப்புகளை உருவாக்கி, அவர்களின் விருப்பப்படி தனிப்பயனாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வேலை, கேமிங் அல்லது பள்ளிக்கு டெஸ்க்டாப் வைத்திருக்கலாம்
மேலும் நீங்கள் ஏற்கனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மானிட்டர்களில் பணிபுரிந்திருந்தால், உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், ஒரு மானிட்டர் துண்டிக்கப்படும்போது, பயன் பாட்டில் இருந்த விண்டோவானது பிரதான மானிட்டர் திரையில் விழும். விண்டோஸ் 10 இல் இது ஒரு கடினமான பணியாகத் தோன்றினாலும், விண்டோஸ் 11 அதை பிரதான திரையில் எந்தத் தாக்கமும் இல்லாமல் செய்தபின் வைத்திருக்க உதவுகிறது. மேலும், மறுபடி மானிட்டர் இணைக்கப்படும்போது, முன்னர் இருந்தது போன்றே காட்சி நிலைநிறுத்தப்படுகிறது.
4. Teams உள்ளிணைப்பு
மைக்ரோசாப்டின் Teams எனும் அதன் வீடியோ கான்ஃபெரன்சிங் மற்றும் மெசேஜிங் கருவி விண்டோஸ் 11 இல் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. மேலும் Teams ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இலும் இயங்குவது நீங்கள் அறிந்தது.
5. புதிய Tablet Mode
விண்டோஸ் 10 இல் இருந்த டேப்லெட் பயனர்களுக்கென மேம்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் சாதனத்தை டேப்லெட் பயன்முறையில் மாற்றியவுடன் அல்லது விசைப்பலகையிலிருந்து பிரித்தவுடன், ஐகான்கள் தொடுகை இலக்குகளுக்கு இடையில் அதிக இடைவெளியுடன் நுட்பமாக மாறுகிறது.
மற்றொரு தனித்துவமான இரண்டாவது அம்சம் என்னவென்றால், இயக்க முறைமை தொடுதிரைக்கு மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இயக்க முறைமையின் மெய்நிகர் விசைப்பலகை தனித்துவமானது, இது ஒரு கையால் யாரும் கையாளக்கூடிய அளவிற்கு சிறியதாக இருக்கும். ஒரே நேரத்தில் ஒரே திரையில் பல திறந்த சாளரங்களை எடுப்பதும் மிகவும் எளிதானது மற்றும் விரைவானது.
உங்கள் லேப்டாப் அல்லது கணினி தொடுதிரை (டச் ஸ்க்ரீன்) என்றால், நீங்கள் கீ போர்ட் இல்லாமலேயே பணியாற்றலாம்.
6. Android பயன்பாடுகளை இயக்கும் திறன்
அண்ட்ராயிட் தொலைபேசி செயலிகளை உங்கள் கணினியில் இயக்க்க கூடிய வசதியையும் விண்டோஸ் 11ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் ஸ்டோர் பயன்பாட்டின் உள்ளே இயங்கும் அமேசான் ஆப்ஸ்டோர் உடன் ஒருங்கிணைந்து வரும். உங்கள் இணக்கமான Android தொலைபேசியில் நிறுவப்பட்ட எந்த பயன்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
7. சிறந்த கேமிங் Gaming அனுபவம்
புதிய விண்டோஸ் 11 ஓஎஸ் பிசி விளையாட்டுப் பிரியர்களுக்கு ளர்களுக்கு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. DirectStorage மற்றும் Auto HDR தொழி நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சேமிப்பகத்திலிருந்து கிராபிக்ஸ் அட்டையில் கேம்களை ஏற்றுவதை DirectStorage வேகப்படுத்துகிறது. Auto HDR அதிக வண்ண வரம்பு மற்றும் கூடிய பட தரத்தை உருவாக்குகிறது.
ஆட்டோஹெச்.டி.ஆர் அம்சம் விளையாடும்போது மிக அழகான கிராபிக்ஸ் விளையாட்டைப் பார்க்க அனுமதிக்கிறது. நீங்கள் கணினியில் ஏதேனும் பழைய கேம்கள் அல்லது எச்டிஆர் அல்லாத கேம்களை விளையாடுகிறீர்கள் என்றால், எச்டிஆர் ஆனது தானாகவே லைட்டிங் மற்றும் வண்ணத்தை புதுப்பிக்க முடியும்.
மேற்சொன்னவை தவிர
- டாஸ்க் பாரில் ஐகான்கள் மத்தியில் வருமாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளன. மேலும் விண்டோ எனும் சாளரங்களின் நான்கு மூலைகளும் வட்டவடிவமாக்கப்பட்டுள்ளன.
- எட்ஜ் மற்றும் ஃபைல் எக்ஸ்ப்ளோரர் போன்ற அனைத்து இயல்பு நிலை ஐகான்களையும் மையத்தில் காண்பீர்கள். இந்த பயன்பாடுகளின் நிலையை மாற்றவும், ஸ்டார்ட் பட்டனை அதன் அசல் இடத்திற்கு நகர்த்தவும் உங்களுக்கு விருப்பம் கிடைக்கும்.
- பின்னணி உருவம் தெரியக் கூடிய ட்ரான்ஸ்பேரண்ட் மற்றும் அனிமேஷன்கள் அசைவுடன் கூடிய விண்டோக்கள் மற்றும் ஐக்கான்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இடைமுகத்திற்கு அழகிய தோற்றத்தையும் வழங்குகின்றன.
- மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒலிகளையும் விழிப்பூட்டல்களையும் கொண்டு வருகிறது
- புதிய தீம் மற்றும் கவர்ச்சிகரமான வால்பேப்பர்களையும் நீங்கள் காண முடியும்.
- அமைவுகள் (settings) பயன்பாட்டில் பெரிய மாறுதல்கள் இல்லை. ஆனால் அதன் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
- இந்த விண்டோவில், தட்டச்சு செய்வதற்கான குரல் தட்டச்சு (Voice Typing) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் மிக வேகமாக தட்டச்சு செய்ய முடியும். இது சிறந்த டச் கீபோர்ட் கொண்டது. இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்