டார்க்வெப் ( Dark Web) தெரியுமா உங்களுக்கு?

 நாம் பயன்படுத்துகிற Web-ன் பெயர் Surface Web(Google, Bing, Yahoo) ஆகும். இணையத்தை 100% வைத்து கொள்ளலாம் உலகில் உள்ள சராசரி மனிதர்கள் அனைவரும் அதிகமாக இணையத்தை பயன்படுத்துக்கிரோம் அப்பொழுது, இந்த Surface Web அந்த 100% எவ்வளவாக இருக்கும் ஒரு 70% அல்லது 80%!!!


                                               Source : https://en.wikipedia.org/wiki/Surface_web

நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், நாம் அனைவரும் பயன்படுத்தும் இணையம் வெறும் 4% மட்டுமே. அப்போது மீதமுள்ள 96% யார் பயன்படுத்துவது, அதில் அப்படி என்ன உள்ளது, எதற்காக அவ்வளவு இன்டர்நெட் பயன்படுகிறது இதற்கான அனைத்து பதில்களும் இந்த Deep Web மற்றும் Dark web தான்.

DEEP WEB

இது அப்படியே Surface Web-ற்கு எதிர்மறையானது.

Deep web என்பது அரசாங்கம் சம்மந்தமான மற்றும் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தரவுகளையும், பகிர்வுகளையும் சேமிக்கின்ற அதை Maintain செய்யவும் பயன்படுவது ஆகும்.


                                                  Source : https://www.google.com/

எடுத்துக்காட்டாக,

  • நம் இராணுவங்களுக்குள்ள ரகசியம், அவர்கள் கண்காணிப்பு அடுத்த அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கு உயர் அதிகாரியிடம் இருந்து வரும் ஆணைகள் அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன.
  • விஞ்ஞான ரீதியாக நாம் கண்டுபிடிப்பது, ஏவுகணைகள் பிற நாடுகள் அறிந்துவிட கூடாதென நம் புதிய முயற்சிகளை வைத்திருப்பது, அதற்கான ஆய்வுகள் என அனைத்தும் இதனுள் அடங்கும்.
  • வங்கிகள் மற்றும் பணவர்தனைகள் அவர்கள் பயன்படுத்தும் தரவுத்தளங்கள்
  • Academic Journals - ஒரு கல்வி அல்லது அறிவார்ந்த பத்திரிகை என்பது ஒரு குறிப்பிட்ட கல்வி ஒழுக்கம் தொடர்பான உதவித்தொகை வெளியிடப்படும் ஒரு குறிப்பிட்ட கால வெளியீடாகும்.
  • ஒரு நிறுவனம் தன் தகவல்களையும், எதிர்கால திட்டங்களையும் பிறருக்கு தெரியாமல் வைத்து இருப்பதும் இந்த வகையே ஆகும்.
  • நாம் பயன்படுத்துகிற Google Drive கூட இந்த Deep Web-ஓடு சேரும். ஏனெனில் அதற்கு அனுமதி உள்ள நம்மால் மட்டுமே அதனை உபயோகிக்க முடியும்... இதுபோன்ற அனைத்தும் Deep Web

இந்த Web- ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியுமே தவிர, அனைவராலும் Surface Web போல பயன்படுத்த முடியாது.

DARK WEB

அடுத்ததாக Dark Web என்பது சட்டவிரோதமாக செய்யக்கூடிய அனைத்து செயல்களும் இதில் அடங்கும். இதற்கான தனிப்பட்ட Tools(Tor) மூலமாகத்தான் இதை பயன்படுத்த முடியும் இதில் நம் பயன்படுத்தும் .com என இல்லாமல் .onion என இருக்கும்.


                                                       https://www.torproject.org/

இதில் பயன்படுத்துகிற அனைத்து பண பரிவர்தனையும் Bitcoins மூலமே நடக்கிறது. ஆகையால், யாரையும் Bank Account details- னை வைத்து Track செய்ய முடியாது.

  • தீவிரவாதம்
  • BlueWhale போன்ற கேம்ஸ்
  • போதை பொருள்கள் பரிமாற்றம்
  • Child Pornography

என மிகவும் மோசமான யாராலும் தடுக்க முடியாத விஷயங்கள் இங்கு நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

ஏனெனில் இதை யாராலும் Trace செய்ய முடியாது (இரும்புத்திரை படத்தில் வரும் இணையம் போல)

இவைதான் Deep web மற்றும் Dark Web இடையேயான வேறுபாடுகள் ஆகும்.

Dark Web -ல் பயன்படுத்த தேவைப்படுகிற Tor நாம் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Previous Post Next Post