மூன்று அதிர்ஷ்டம்

    ஒரு வீட்டில் சுதா மற்றும் அவரது கணவர் மேலும் சுதாவுடைய தந்தை மற்றும் தாய் வசித்து வந்தனர். ஒரு நாள் சுதா அதி காலையில் வாசல் தொழித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தால் அப்பொழுது அங்கு மூன்று வயதாவர்கள் அவள் வாசலுக்கு முன் நின்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது சுதா அவர்களிடம், எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால். அவர்கள் வீட்டில் யாரேனும் பெரியவர்கள் இருக்கிறீர்களா என்று வினாவினர். ஆம் என்று இவள் பதில் கூறினால்.

    சரி நாங்கள் மூவரும் மூன்று அதிர்ஷ்டங்கள். ஒன்று "அன்பு " இரண்டாவது "பணம்" மூன்றாவது "புகழ்". எங்கள் மூவரில் நீங்கள் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய இயலும். அப்படித் தேர்வு செய்யும் நபர் உங்களுடன் எப்பொழுதும் இருப்போம் என்று கூறினர்.

     இதைக் கேட்ட சுதா, தன் வீட்டிற்குள் சென்று தன் கணவன், அப்பா மற்றும் அம்மாவிடம் நடந்ததைக் கூறினால். அதற்கு அவள் கணவன் "பணத்தை " தேர்வு செய்யலாம் என்றுக் கூறினார்.

     அதற்கு அவளது அப்பா இல்லை இல்லை "புகழை" தேர்வு செய்யலாம் என்று கூறினார். அதற்கு அவளது அம்மாவோ இல்லை இல்லை "அன்பினை" தேர்வு செய்யலாம்.

      அன்பு ஒன்று இருந்தால் நம் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறினால். இதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். பிறகு சுதா சென்று, அன்பு என்ற அதிர்ஷ்டத்தை நாங்கள் தேர்வு செய்து உள்ளோம் என்றுக் கூறினால். இதைக் கேட்ட அவர்கள் அன்பு என்ற நபர் அவளது வீட்டிற்குள் நுழையும் பொழுது மற்ற இரண்டு நபர்களான "புகழ்" மற்றும் "பணம்" இரண்டும் உள்ளே நுழைந்தனர்.

    இதைக் கண்ட சுதா, குழப்பமடைந்தால்.  நீங்கள் குடுத்த கட்டளையின்படி, ஒருத்தர் மட்டுமே நாங்கள் தேர்வு செய்தோம்... ஆனால் நீங்கள் இருவரும் உள்ளே போகிறீர்கள் அது ஏன்? என்று வினவினால்.....

        அதற்கு அவர்கள் மூவரும் அன்பைத் தவிர நீங்கள் வேறு எதைத் தேர்வு செய்தாலும் நாங்கள் ஒருத்தர் மட்டுமே உங்கள் வீட்டிற்கு சென்று இருப்போம். ஆனால் நீங்கள் தேர்வு செய்தது "அன்பு" இதனால் அன்பு இருக்கும் இடத்தில் "புகழ்" மற்றும் "பணம்" தானாக வந்து சேரும் என்பதால், நாங்களும் உள்ளே போக இருக்கிறோம்.....என்று கூறினர்.. இதைக் கேட்ட சுதா அம்மாவின் அருமையான எண்ணத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தால்.....



நீதி :-

**

      அன்பு மற்றும் போதும் சிறந்த வாழ்க்கையை வாழ, மற்ற அனைத்தும் தானாக வந்து சேரும்............

Previous Post Next Post