ஒரு அடர்ந்த காட்டில் நிறைய மரங்கள் இருந்தன. அவற்றில் ஒரு மரம் மட்டும் வித்தியாசமாக இருந்தது. இலைகள் இல்லாமலும், கிளைகள் வளைந்து வளைந்தும் காணப்பட்டது. இதனால் மற்ற அனைத்து மரங்களும், இந்த மரத்தை கேலி செய்தனர். இதனால் அம்மரம் எப்பொழுதும் கவலையில் இருந்தது, மேலும் கடவுள் தனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட உருவத்தினைக் கொடுத்தார் என்று கோவத்தில் ஆழ்ந்தது.
ஒரு நாள் மரம் வெட்டும் மரவெட்டி அங்கு வந்து இந்த மரத்தைப் பார்த்து, தனது தேவைக்கு இம்மரம் உதவாது என்று தனக்குள் சொல்லிவிட்டு, அருகில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டிக் கொண்டு இருந்தார். அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த மரத்திற்கு, " கடவுள் தனக்கு கொடுத்த வாழ்க்கையின் சிறப்பை ".
அதில் இருந்து வழக்கையை வாழ அழகு அவசியம் இல்லை என்பதை உணர்ந்தது அந்த மரம்.
நீதி :-
****
அழகு ஆபத்தானது........