ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கம், ஒவொரு நாளும் ஒரு விலங்கை தனது பசிக்கு இறையாக்கி கொண்டு வந்தது. இதனால் ஒரு மான், " அந்த சிங்கத்திடம் இருந்து தன்னையும் தன் குட்டியையும் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்று மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது ". ஒரு நாள் இந்த மான், ஒரு கங்காரூ அதன் குழந்தையை அதன் பையில் எடுத்துக்கொண்டு மிக வேகமாக ஓடுவதைப் பார்த்தது.
அதைப் பார்த்து அதைப் போல தானும், தன் குட்டியும் வேகமாக ஓட பயிற்சி எடுத்துக் கொண்டால் அச்சிங்கத்திடம் இருந்து தங்களைப் பாத்துக்காத்துக்கொள்ள இயலும் என்று எண்ணியது.
மேலும் தன் குட்டியை வயிற்றில் ஒரு கயிற்றின் உதவியுடன் கட்டிக்கொண்டு ஒடத் துடங்கியபோது, மான் மற்றும் மான் குட்டி கீழே விழுந்தன.. குட்டி மானுக்கு இதனால் அடி பட்டது.
பிறகு தனது முட்டாள் தனத்தை எண்ணி வருந்தியது.
நீதி :-
*****
ஒருத்தர் ஏதேனும் செய்தால் அதனைப் பார்த்து நம்மளும் செய்ய வேண்டும் என்று செய்வது தவறு......