ஒரு ஊரில் ஒரு மரவெட்டி இருந்தார். அவரது ஏழ்மை நிலையின் காரணமாக அவர் தினமும் மரம் வெட்டி தன் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்து வந்தார். அவரிடம் இருக்கும் ஒரே சொத்து அவரது " மர வெட்டி " ஒன்று மட்டுமே.
ஒரு நாள் துரதிஷ்ட வலையின் பிடியில், மரம் வெட்டும் தருணத்தில் வெட்டுகின்ற கத்தி பிடியில் இருந்து விடுபட்டு ஆற்றில் விழுந்து மூழ்கியது. இதனால் மிகுந்த கவலையில் மூழ்கினான். மேலும் அவரது மனதின் புலம்பளை ஒரு பெரியவரால் கேட்கப்பட்டது.
பிறகு அவர் மர வெட்டியின் முன்னே தோன்றினார். நடந்ததை அனைத்தும் அவரிடம் கூறினான்.
பிறகு அந்த முதியவர் ஆற்றினுள் மூழ்கி தங்கத்தால் ஆன மரவெட்டியை எடுத்து இதுவா? என்றுக் கேட்டார். அதற்கு அம்மரவெட்டி "இல்லை" என்று கூறினான்.
மேலும் நீரில் மூழ்கி வெள்ளியால் ஆன மரவெட்டியைக் காட்டினார். அதற்கு "இல்லை" என்று கூறினான்
மேலும் இன்னொரு மரவெட்டியை நீரில் மூழ்கி எடுத்துக் காட்டினார். அதை பார்த்து இதுவே என்னுடையது என்று "மகிழ்ச்சியில்" கூறினான்.
இதைக் கண்ட அந்த பெரியவர் பூரித்து " உனது நேர்மையைக் கண்டு நான் வியந்து போனேன் " என்று கூறிவிட்டு அவரது
மரவெட்டியைக் கொடுத்தார். மேலும் அந்த தங்கம் மற்றும் வெள்ளி மர வெட்டியையும் கொடுத்தார்.
நீதி :-
***
நேர்மையே உயரிய கொள்கை
நேர்மையோடு வாழ்பவனுக்குக் கடவுள் எப்பொழுதும் துணை நிற்கும்.