ஒரு ஊரில் இரண்டு வணிகர்கள் இருந்தனர். இருவரும் இரு கழுதைகள் வைத்து இருந்தனர். ஒரு வணிகரோ மிகவும் பண பலம் மிக்கவர். இன்னொருவர் பருத்தி வியாபாரம் செய்பவர்.
ஒரு நாள் இவ்வணிகரும் தங்களது கழுதைகளுடன் மார்க்கெட்டிற்கு
செல்லும்பொழுது பணக்கார வணிகறது கழுதை, நிறைய பொற்க்கசுகளைச் சுமந்து கொண்டு வந்தது, மேலும் மூட்டையில் உள்ள பொற்காசுகள் உறையும்பொழுது சத்தம் வந்தது. இன்னொரு பருத்தி வணிகறது கழுதை பருத்திப் பஞ்சை சுமந்து வந்தது. பணக்கார வணிகரையும் அவரது கழுதையினையும் மிகுந்த நாள் நோட்டமிட்ட திருடர்கள், அன்று அக்கழுதையினைப் பிடித்து அடித்து அனைத்து பொற்காசுகளையும் எடுத்துக்கொண்டு அதை அவ்வாறே விட்டுசென்றனர்.
நீதி :-
*****
மிகுந்தப் பணம் மிகுந்த கவனம்