அம்மா மான் குட்டி மான்

*******************************


     அம்மா மான் மற்றும் மான் குட்டி ஒரு காட்டில் வாழ்ந்து வந்தது.. குட்டி மானோ எப்பொழுதும் காட்டில் தூரமாக சென்று விளையாட வேண்டும் என்ற ஆசை கொண்டு இருந்தது. ஒரு நாள் சொல்பேச்சை கேட்காமல் காட்டில் நெடுந்தூரம் சென்று விளையாட ஆரம்பித்தது. பிறகு பசி எடுக்கத் துடங்கிய பொழுது தன் அம்மாவின் நியாபகம் வந்தது. பிறகு அம்மாவைத் தேடத் துடங்கியது. நெடு நேரம் தேடிய பிறகும் அம்மாவை கண்டு பிடிக்க முடியவில்லை ஆகையால் அழுகத் துடங்கியது....அப்போது தான் அம்மாவின் சொற்கள் நியாபகம் வந்தது "தன்னை விட்டு எங்கும் நெடுந்தூரம் செல்ல வேண்டாம் என்பது" இதைப் புரிந்து கொண்டு மீண்டும் தான் செய்த தவறை எண்ணி அழுகத் துடங்கியது.பிறகு இரண்டு நாட்கள் கழித்து கொடிய பசி மற்றும் பயத்தில் இருந்தது. மேலும் பயத்தோடு தேடி தன் அம்மாவை கண்டு பிடித்தது. அதில் இருந்து அம்மாவின் பேச்சை எப்பொழுதும் தவறாமல் கேட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தது.


நீதி :-

*****

      அம்மா மற்றும் அப்பா இருவரும் இவ்வுலகில் மிக சிறந்த நண்பர்கள்.....

Previous Post Next Post