ஒரு பட்டம்

**********


           அன்று பட்டம் விடும் விழாவாக காணப்பட்டது.. ஒரு தந்தை மகனுடம் பட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்.அங்கு அவர்களுக்கு பட்டம் நன்கு உயரமாக செல்ல வேண்டும் என்று ஆசை. அதனால்  மகனோ,      "அப்பா நீங்கள் ஏன்? இன்னும் இதனை பிடித்து வைத்து உள்ளீர்கள்?, கயிற்றிணை அவிழ்த்து விடுங்கள், பிறகு நம் பட்டம் தான் மிக உயரத்தில் பறக்கும் என்று கூறினான்". இதை கேட்ட அவனின் தந்தை, அவ்வாறே செய்தார். பிறகு பட்டம் நிலைத் தடுமாறி கீழே விழுந்தது. இதைப் பார்த்த அவரின் மகனோ கவலையில்

திகழ்ந்தான். அப்பொழுது அவனின் தந்தை மகனே பட்டத்தை கையில் பிடித்து வைத்துள்ளேன் என்பதால் நான் அதனை எனது முழுக் கட்டுப்பாட்டில் தான் அது இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அதனை வானில் எந்தத் தடையும் நெருங்காமல் மென்மேலும் உயரப் பறக்கவேண்டும் என்றும், மற்ற பட்டத்துடன் பட்டு கீழே விழாமல் இருக்க வேண்டும் என்றும் நினைத்து தான் நான் கையில் பிடித்து வைத்து இருந்தேன்...இவ்வாறு கூறும்போழுது தந்தையின் மகன் தான் செய்த தவறை எண்ணி, அப்பா நான் உங்களைத் தவறாக எண்ணி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டான்.


நீதி :-

*****

          குழந்தைகளே நம்முடைய பெற்றோர் நம்மளுக்கு சில விதி முறைகளோடு வாழக் கற்றுக்கொடுப்பார். அவை அனைத்தும் நாம் நல் வழியில் எந்த தடையும் இன்றி செல்லவேத் தவிர, நம்மைத் துன்புருத்துவதற்கு அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

Previous Post Next Post