சிங்கம் மற்றும் முயல்

**********************



       ஒரு காட்டில் சிங்கம், அக்காட்டின் ராஜாவாக வாழ்ந்து வந்தது. அது தனது பசியினை போக்க, ஒவ்வொருநாளும் ஒரு விலங்கு தனக்கு இரையாக வேண்டும் என்று ஆணையிட்டது. இதற்கு அக்காட்டில் வாழும் விலங்குகளும் ஒப்புக் கொண்டனர். ஒரு நாள் முயலின் தருணம் ஆனது. முயலோ சிங்க ராஜாவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றும், மேலும் அனைத்து விலங்குகளையும் சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தது. ஆகையால் முயல் தாமதமாக சென்றது. இதனால் சிங்க ராஜா கோவம் கொண்டு இருந்தார். மேலும் ஏன் தாமதம் என்று கேட்டார்?  இதற்கு முயலோ, தான் வரும் வழியில் ஒரு சிங்கத்தைப் பார்த்ததாகவும், மேலும் அதுவே இக்காட்டின் ராஜா எனவும்  கூறிக்கொண்டே  இருந்ததாகவும் கூறியது. அதற்கு நானோ இல்லை இல்லை உண்மையான ராஜா நீங்கள் இல்லை,   நான் உண்மையான ராஜாவினைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றுக் கூறி விட்டு வருகிறேன். இதுவே தனது தாமதத்திற்கு காரணம் என்றும் கூறியது.

      இதை அறிந்து அச்சிங்கம், கோவம் கொண்டு, இன்னொரு சிங்கத்தினை பார்க்க முயலுடன் சென்றது. முயலோ ஒரு கிணற்றில் உள்ள நீரிணைக் காட்டியது.அதில் சிங்கத்துடைய நிழல் தெரிந்தது. இதை அறிந்த சிங்கம் அந்த  நிழலினை இன்னொரு சிங்கம் என எண்ணி அதன் மீது பாய்ந்தது. பிறகு கிணற்று நீரில் மூழ்கி இறந்தது. அது முதல், அனைத்து விலங்குகளும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.


நீதி :-

****

     தனது தேவைக்காக மற்றவர்களை வதைத்தல் கூடாது.

Previous Post Next Post