நீர் ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்ன?

 நீர் ஆப்பிள் என்பது தண்ணீர் சத்துக்கள் நிறைந்த ஒரு பழம். தமிழ்நாட்டில் 1,500 அடிகளுக்கு மேல் உள்ள ஏலகிரி ,ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் காய்க்கின்றது. பெயர் நீர் ஆப்பிள் என்றாலும் தாவரவியல் ரீதியாக ஆப்பிளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

இது ரோஜா ஆப்பிள், பன்னீர். ஆப்பிள், வேக்ஸ் ஆப்பிள், ஜாவா ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும். எனவே இதற்கு ரோஜா ஆப்பிள் என்று பெயர். இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்பர். இந்த பழம் சுவையில் மட்டுமல்லாமல் மருத்துவப் பலன்களிலும் சிறந்த இடத்தை வகிக்கிறது.இனிப்பு, நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிளின் சுவை அலாதியானது.ரோஜா இதழ்களைப் போன்ற சுவை உடையது.இது பருவகாலம் பழம் என்பதால் கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் காணப்படுகிறது.

நீரிழிவு நோய், புற்று நோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்பு தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்

ஒவ்வொரு பழத்திலும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடிய எண்ணற்ற வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ, பி1, பி2 போன்ற வைட்டமின்களும் , கால்சியம், பொட்டாசியம், இரும்பு,மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம்,புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

நீர் ஆப்பிளின் சாறு 100கிராம் ஒன்றுக்கு 93 கிராம் தண்ணீரைக் கொண்டிருப்பதால், உடலின் நீர் ஏற்றத்தை பராமரிக்க உதவுகிறது.

மருத்துவப் பயன்கள்

மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது .

* மலேஷியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு ரோஜா ஆப்பிள் மரத்தின் பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காப்பி பயன்படுத்தப்படுகிறது.

* இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை பெற உதவுகிறது.

* நீர் ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.

*அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவக்கூடிய டையூரிடிக் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

* நீர் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவுகின்றன .

* கியூபாவின் பூர்வீகத்தில், வேரை கால் -கை வலிப்பு பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

* கொலம்பியா மக்கள் நீர் ஆப்பிள் விதைகளை வலிநிவாரணியாகப் பயன்படுத்துகின்றனர்.

* இதன் இலை ஹெர்பெஸ் வைரஸைக்கு எதிராக வலுவான வைரஸ் தடுப்பாக விளங்குகிறது.

நீரிழிவு

நீர் ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு 'ஜம்போசின் 'உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரை ஆக மாற்றிடும். நாவல் பழத்தை போலவே நீரிழிவு நோயாளிகளும் நேரடி ஒரு நோயை கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம்.

இதயம்

நீர் ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால் அது கொழுப்பு சத்துக்களை சீராக்க உதவிடும். இதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். அதாவது மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

நோய் எதிர்ப்புச் சக்தி

நீர் ஆப்பிளில் காலிக் அமிலம், மைரிசெடின், உர்சோலிக் அமிலம் மற்றும் மைரிசிட்ரின் ஆகியவை உள்ளன. அவை வலுவான ஆக்சிஜனேற்ற செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. இந்த கலவைகள் அழற்சி சைட்டோகைன்களை தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த பழத்தின் ஆண்டி மைக்ரோபியல் செயல்பாடு நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும், பல்வேறு நோய்களுக்கு எதிராக போராட, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

நார்ச்சத்து

இதிலுள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

மூளை ஆரோக்கியம்

நீர் ஆப்பிள் மூளைக்கு ஒரு டானிக்காக செயல்படுகிறது பழத்தில் உள்ள டெர்பெனாய்டுகள் அல்சைமர் போன்ற நரம்பியல் கடத்தல் நோய்களை தடுப்பதற்கும், நரம்பியல் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் மூளை செயல்பாடுகள், நினைவகம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

வலிமையான எலும்பு

100 கி நீர் ஆப்பிளில் 29 கி கால்சியம் உள்ளது.இதை உட்கொள்வதினால், எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டுகளில் அல்லது இணைப்பு திசுக்களில் தீவிர வலியால் உண்டாகும் வாத நோய் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

செரிமானம்

நீர் ஆப்பிளில் கரிமச் சான்றுகளாக மெத்தனால், ஹெக்ஸேன் மற்றும் டிக்ளோரோமீதேன் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன இரைப்பை குழாயின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது எதனால் செரிமானம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகளை போக்குகிறது.

நச்சுக்கள் நீக்கம்

நீர் ஆப்பிள் டையூரிக் தன்மை வாய்ந்த பழம். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இந்த பழத்தில் பினோலிக் கலவை மற்றும் சப்போனின்கள் உள்ளன. அவை ஹெபாப்ரோடெக்டிவ் அழற்சி எதிர்ப்பு மற்றும் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

புற்றுநோய்

பழத்தில் உள்ள இயற்கை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கவும் ,புற்று நோயின் அபாயத்தை தடுக்கவும் உதவுகின்றன.

நீர் ஆப்பிளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் சரும பிரச்சனைகள் ,பருக்களை போக்குகிறது .சரும வறட்சியை போக்கி சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கொடுத்து காக்கிறது.

Previous Post Next Post