பிராமி அதாவது வல்லாரை என்ற கீரை முக்கியமாக நினைவாற்றல் அதிகரிப்புக்கு பயன்படுத்தப் படுகிறது.
நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது. வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் படி பங்காற்றுகிறது என்கிறார்கள்.
வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், கவனக் குறைவு, அழற்சியைப் போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம்.