*******************
ஒரு ஊரில் நிறைய ஆமைகள் இருந்தான். அவைகளுக்குள் போட்டி வைத்தனர். எந்த ஆமை முதலில் மலை உச்சியை சென்று அடைகிறதோ அதுவே போட்டியின் வெற்றியாளன். போட்டி துடங்கியது. அப்பொழுது அருகில் உள்ள அனைவரும் ஆமைகளால் இவ்வளவு தூரம் செல்ல முடியாது. அவைகள் இயற்கையாகவே மெதுவாக செல்லும் திறன் கொண்டவைகள் என நிறைய ஆட்கள் கூற ஆரம்பித்தனார். போட்டி துடங்கியது, ஆமைகள் செல்ல ஆரம்பித்தனார். பிறகு சிறிது நேரத்தில் சில ஆமைகள் தன்னால் முடியவில்லை என்று போட்டியை விட்டு விலகி வந்தனர். இன்னும் சிறிது நேரம் கழித்து மற்ற சில ஆமைகள் விலகி வந்தன. இறுதியில் ஒரே ஒரு ஆமை மட்டும் போட்டியில் தொடர்ந்து போய்க்கொண்டு இருந்தது. மேலும் அது மலை உச்சியையும் தொட்டது. பின்னர் அதுவே போட்டியின் மிக சிறந்த வெற்றியாலன். பரிசு அளிக்கும் தருணத்தில், அதற்கு காது கேட்காது என்பது தெரியவந்தது.
காது கேட்காததால் மற்றவர்கள் சொல்லுவதை கேட்க இயலவில்லை. அது தனது இலக்கை நோக்கி பயணத்தித்தது. இதனால் வெற்றி பெற முடிந்தது.
நீதி :-
*******
இலக்கை அடைய மற்றவர்களின் அறிவுரை தேவை இல்லை.