***************
ஒரு ஊரில் ஒரு தாத்தா
பப்பெட்(puppet) நாடகம் நடத்துபவர். இவர் ஒரு நாள் பப்பெட் பொம்மை ஒன்றை வழக்கம் போல் உருவாக்கினார். அது மிக அழகாக வந்தது, மேலும் அதற்கு பின்னச்சியோ(pinnachio) என்று பெயர் வைத்தார். அவர் இரவு தூங்க செல்கையில் வானத்தில் உள்ள நட்சத்திர கடவுளிடம், தனக்கு கொடுத்த இந்த வாழ்க்கைக்கு மிக்க நன்றி என்றும், மேலும் இன்றைக்கு நான் ஒரு பப்பெட்(puppet) பொம்மை ஒன்றை செய்துள்ளேன். அது மிக அழகாக வந்து உள்ளது என்றும், அதற்கு உயிர் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றும் சொல்லிவிட்டு தூங்க சென்றார்.
அவர் தூங்கிய பிறகு தேவதை ஒன்று உருவானது. மேலும் தாத்தாவிடம் சென்று "தாத்தா நீங்கள் நிறைய மக்களை பொம்மை நாடகம் நடத்தி சிரிக்க வைத்து உள்ளீர்கள். அதனால் நீங்க ஆசைப்பட்டத நான் நிறைவு செய்ய வந்து இருக்கேன் தாத்தா" என்று சொல்லிவிட்டு, பின்னச்சியோவிடம் சென்று, "பின்னச்சியோ, நான் உனக்காக நடக்க, மற்றும் பேச இவவிரண்டிற்கும் உரிய ஆற்றலைத் தருகிறேன். முற்றிலும் மனிதனாக மாற வேண்டும் என்றால்... நீ மூன்று விஷயங்களைக் கையாள வேண்டும்.
1)சுயநலமின்மை
2)உண்மையாக இருத்தல்
3)தைரியமாக இருத்தல்
இம்மூன்றையும் எப்பொழுது பின்பற்றுகிறாயோ அப்பொழுது நான் உன்னை முழுவதும் மனிதனாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றது.
காலை தாத்தா எழுந்து பார்க்கும் பொழுது பின்னச்சியோ "நடக்கவும்"
"பேசிக்கொண்டும்" இருந்தது. இதைப் பார்த்த தாத்தாவிற்கு ஒரே மகிழ்ச்சி.
மேலும் பின்னச்சியோவை ஸ்கூலிர்க்கு அனுப்பியது. ஆனால் பின்னச்சியோ ஸ்கூலிர்க்கு போகாமலா பசங்களுடன் சேர்ந்து ஒரு ஹோட்டல்க்கு சென்று அங்கு நன்றாக விளையாடிக்கொண்டு இருந்தது. இதை அறிந்த ஹோட்டல் உரிமையாளர் "இது என்ன? இந்த பப்பெட்(puppet) நடக்கவும் பேசவும் செய்கிறது. இதை நாம் வெளியே விடக்கூடாது என்று எண்ணி அடைத்து வைத்தது.
பிறகு தேவதை தோன்றி என்ன பின்னச்சியோ இது?
என்று கேட்டது. அதற்கு பின்னச்சியோ நான் சும்மா இருக்கும் பொழுது என்னை இங்கு பிடித்து அடைத்து விட்டனர் என்று பொய் கூறியது. தேவதை பொய் என்பதை அறிந்து பின்னச்சியோவின் மூக்கை நீளமாக்கியது. இதனால் பின்னச்சியோ தனது தப்பை ஒப்புக்கொண்டது.இதனால் தேவதை அதன் மூக்கை சரி செய்தது. மேலும் பொய் பேசக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டது.
மேலும் சில நாள் கழித்து இதே போல் இன்னொரு இடத்தில் மாட்டிக்கொண்டது. அப்பொழுது தான் தெரியவந்தது, தாத்தா மட்டுமே இவ்வுலகில் தனக்கு சிறந்தவர் என்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பித்து கடல் வழியாக தாத்தா வீட்டிற்கு வந்தது. ஆனால் தாத்தா அங்கு இல்லை... அங்கு இருந்தவர்கள் தாத்தா உன்னைத்தான் தேடி கடல் வழியாக சென்றார் என்று கூறினர். இதனை அறிந்த பின்னச்சியோ கடலில் குதித்தது. அங்கு இருந்த மீன்கள் பின்னச்சியோவிடம் சென்று "தாத்தாவை திமிங்கலம் விழுங்கி விட்டது என்று என்பதைக் கூறினர் "
இதை அறிந்த பின்னச்சியோ அந்த திமிங்கலம் கொட்டாவி விடும் தருணத்தில் அதன் உள்ளே சென்று தாத்தாவை வெளியே கூட்டிக்கொண்டு வந்தது. அப்பொழுது தேவதை அங்கு தோன்றி "நீ இன்று சுயநலமின்மை இன்றியும் மிக்க தைரியமாகவும், உண்மையாகவும் இருந்து காட்டியுள்ளாய்" ஆகையால் நான் உன்னை முழு மனிதனாக மாற்றுகிறேன் என்று கூறி அவ்வாறே செய்தது... அது முதல் பின்னச்சியோவும் தாத்தாவும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தனர். மேலும் பின்னச்சியோ எப்பொழுது தைரியம் உண்மை சுயநலமின்மையை கைப்பற்றியது.......
நீதி :-
****
உண்மை, சுயநலமின்மை,தைரியத்துடன் வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.