இளம் வயதில் ஆண் பெண் பேதம் இன்றி பாடாய் படுத்தி,மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மையும் கொடுக்கும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது.
சருமத்தின் அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவம் சீபம் எனப்படும்.
பருவ வயதில் ஆண்ட்ரோஜன் என்ற ஆர்மோன் சுரக்கும்.சிலருக்கு இந்த சுரப்பு அதிகரிக்கும் போது ,சீபத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் எண்ணெய் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன.
முகப்பருவை நீக்கும் மஞ்சள் கற்றாழை 🌵 ஃபேஸ் பேக்::
கற்றாழையின் மடலில் இருக்கும் நுங்கு போன்ற ஜெல்லை எடுத்து நன்றாக கசக்கி அதில் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் பேஸ்ட் பதத்திற்கு குழைத்து, முகம் முழுக்க தடவி, உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.
இது எளிமையானதோடு, கற்றாழை 🌵 இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமான வைக்க உதவுகிறது. நச்சுக்களை போக்கி சருமத்தை சுத்தப்படுத்தும்.மஞ்சள் ஒரு கிருமி நாசினி.சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.
#முல்தானிமட்டி சிட்ரஸ் பேக்::
எலுமிச்சை 🍋 சாறுடன் தேவைக்கேற்ப நீர் கலந்து அதில் முல்தானி மட்டியை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து, முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் தடவவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ, முகப்பருவுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
எலுமிச்சை 🍋 வைட்டமின் சி சத்து உள்ளது.சருமத்திலிருக்கும் பாக்டீரியாக்களை அகற்றி சருமத்தை பளபளக்க வைக்கும்.முல்தானி மட்டி இறந்த செல்கள் நீக்கி சருமத்தை புத்துயிர் அடையச் செய்கிறது.
#பூண்டு, தேன் 🍯 மாஸ்க்::
பூண்டு காரத்தன்மை கொண்டது.சருமத்தில் இலேசாக எரிச்சல் கொடுக்கும்.முதலில் பூண்டை பயன்படுத்துபவர்கள், பூண்டு பற்களை பன்னீரில் நனைத்து 5 நிமிடங்கள் ஊறவைத்து இடித்து, பின்னர் தேன் 🍯 கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் ஆரோக்கியம் தெரியும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டு சருமப் பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது.வாரம் மூன்று முறை இதை செய்தால்,முகப்பருவிற்கு தீர்வாக அமையும்.
# உருளைக்கிழங்கு 🥔 மாஸ்க்::
உருளைக்கிழங்கு 🥔 தோல் உரித்து நீர் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து கலக்கி, பருக்கள் மீது தடவி,20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.மிகவும் எளிதான வழி ஆகும்.
உருளைக்கிழங்கு எப்போதும் வீட்டில் இருக்கக் கூடிய ஒரு பொருள்.கண்களில் கருவளையம் அகற்றுவதோடு தெளிவான சருமத்தை பெற உதவுகிறது.இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை உள்ளன.ஆதலால் சரும ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.சருமத்தின் நிறத்தையும் மீட்க உதவுகிறது.இதை தினமும் செய்யலாம்.
#தக்காளி ஃபேஸ் பேக்::
#தக்காளியோடு எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து,20நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதை தினமும் இரு முறை செய்யலாம்.
தக்காளி 🍅 ஃபேஸ் பேக் பருக்கள் நீக்குவதோடு, முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள், பழுப்பு நிறம் அகற்றி முகம் பிரகாசிக்கும்.
வறட்சியான சருமம் கொண்டவர்கள் பால் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை 🍋 பயன்படுத்தலாம்.அனைத்து வகை சருமத்தினரும் தேன் 🍯 பயன்படுத்தலாம்.
#கிராம்பு ஃபேஸ் பேக்::
கிராம்பை இடித்து பன்னீர் சேர்த்து மைய அரைத்து, பருக்கள் மீது தடவி வரவும்.நீண்ட நேரம் உலர விட்டால் பலன் கிடைக்கும். இரவில் தடவி வந்தால் சில நாட்களில் பலன் தெரியும்.இது முகப்பருக்களைப் வேரோடு அகற்றும்.
# வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ,இ,சி சத்துக்கள் அதிகப்படியான எண்ணெயை நீக்கி முகப்பருக்களை முற்றிலும் அகற்றி, சருமத்தை மென்மையாகச் செய்கிறது.வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசலாம் அல்லது வெள்ளரிக்காய் ஊறவைத்த நீர் கொண்டு முகத்தைக் கழுவலாம்.
#ஆப்பிள் சிடர் வினிகர்:
இதில் இருக்கும் சரும நன்மைகள் மிக அதிகம்.இரவு தூங்கும் முன், பருக்கள் உள்ள இடத்தில் இதைத் தடவி, காலையில் எழுந்து பார்த்தால், நம்பமுடியாத அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.
#புதினா:
இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் பருக்களை நீக்க உதவும். மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களை நீக்கும்.
புதினா இலைகள் அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
# தேயிலை எண்ணெய்::
முகத்தில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆண்டி பாக்டீரியா வாக செயல்படுகிறது.
எண்ணெயில் பஞ்சை நனைத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒத்தி எடுத்து 15–20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.
# பன்னீர்-எலுமிச்சைச் சாறு.
எலுமிச்சை சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீரில் சம அளவு கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.வாரம் மூன்று நாட்கள் செய்யலாம்.
#சந்தனம்:
சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி,15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.இவ்வாறு மூன்று மாதங்கள் செய்து வர குணம் கிடைக்கும்.
சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவ, பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
# ரோஜா மொட்டுக்களை சூடான நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.அந்த நீரை வடிகட்டி முகத்தில் தடவி,அரை மணி நேரத்திற்கு பிறகு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய, பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
# வேப்பிலை:
வேப்பிலை ஒரு கிருமி நாசினி.கொழுந்து வேப்பிலையை அரைத்து பருக்கள் மீது தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ முகப்பருக்கள் நீங்கும்.
# ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு 🍊
ஆப்பிள் மற்றும் பப்பாளி பழச் சாற்றை முகத்தில் பூசலாம்.
ஆப்பிள் பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் 🍯 கலந்து முகத்தில் பூசி வர பருக்கள் மறையும்.வாரம் இருமுறை இதைச் செய்யலாம்.
ஆரஞ்சு 🍊 பழச்சாற்றை குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி,அரை மணி நேரம் கழித்து, துடைத்து எடுக்க வேண்டும்.சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் அகலும்.
## முகப்பருக்களை முற்றிலும் தடுக்க,.. தவிர்க்க…
- . பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்தலை தவிர்க்க வேண்டும்.
- சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்குத் தேவை.எனவே, தினமும் காலையில் 7–8 மணி வரை சூரியக் குளியல் எடுப்பது நல்லது.
- உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.எளிதில் சீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
- பழங்கள் காய்கறிகள் கீரைகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள், நெய், வெண்ணெய், கேக் 🍰, ஐஸ்கிரீம், சாக்லேட் 🍫, பாலாடை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
- மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பருக்களை கிள்ளவோ,அழுத்தவோக் கூடாது.
- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்த வித வாசனை சோப்புகளையும் , திரவியங்களையும்(லோஷன்) பயன் படுத்தக் கூடாது.