1.பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது
பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து (Iron) நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது. தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வர , உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.சில குழந்தைகள் பேரீச்சம்பழத்தை விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு பேரீச்சம்பழத்தில் லட்டு கேக் போன்றன செய்து கொடுக்கலாம்.
2. மாதுளம்பழத்தில் ஏராளமான இரும்புச்சத்து
மாதுளை, இரும்புச்சத்து நிறைந்த ஒரு சிறந்த பழம் ஆகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது.மேலும் மாதுளைக்கு உடலில் இரத்தத்தைப் பெருக்கும் சக்தி உண்டு.
பெண்களுக்கு ,மெனோபாஸ் காலங்களில் மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும்.
இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். அதோடு எலும்புகள் வலுப்பெற உதவும்.
3. அத்திப்பழம் இரும்புச்சத்திற்கு ஆதாரம் (Iron in fig)
உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் (fig) ஒரு சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிடுபவர்களுக்கு இரத்தசோகை, மலசிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்காது. முக்கியமாக ஆண்களுக்கு அத்திப்பழம் மிகவும் நல்லது.
அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் , நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.எனவே, தினமும் இதனை உண்டு பயன் பெறுங்கள்.
4. கொய்யாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து (Iron in Guava)
கொய்யப்பழம் இரும்புச்சத்து (Iron) , நார்சத்து, வைட்டமின் சி, ப்ரோடீன், மெக்னீசியம் போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் கொய்யப்பழத்திற்கு இரத்த சர்க்கரை அளவினை கட்டுபடுத்தும் சக்தியும் உள்ளது.
முடி உதிர்வு,இரத்தப்போக்கு உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
5.உலர்திராட்சையில் அடங்கியுள்ள அதிக இரும்புச்சத்து( Iron in Raisins)
தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை (Raisins) உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச்சத்து கிடைக்கும். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு எடையும் அதிகரிக்கும்.
6. ஆப்ரிகாட்டில் அதிகளவு இரும்புச்சத்து (Iron in Apricot)
ஆப்ரிகாட் (Apricot) பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புசத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கல்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகமாக உற்பத்தியாக ஆப்ரிகாட்பழம் உதவி செய்கிறது.