பழங்கள் மாநாடு

****************


ஒரு ஊரில் உள்ள அனைத்து பழங்களும் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டினை நடத்தினர். அதில் ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், அன்னாசிப்பழம் போன்ற அனைத்து பழங்களும் கலந்து கொண்டன. அதில் ஒரு பழம் தலைமை ஏற்று அந்த மாநாட்டில், எந்த பழம் சிறந்தது என்ற தலைப்பினைக் கொண்டு முன்னுரை ஆற்றியது. 


அதில் அனைத்து பழங்களும் தனது புகழைப் பற்றிப் பற்றி பேசத் துடங்கின. அதில் திராட்சைப் பழம் மட்டும் அமைதி காத்து வந்தது. இதனால் மற்ற அனைத்து பழங்களும் எள்ளி நகையாடியது. அப்பொழுது பலாப்பழம் உருண்டு சென்று திராட்சையிடம் ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டது. எனக்கு நன்றாகத் தெரியும் நீயே இவ்வனைத்து பழங்களையும் விட சிறந்தவன். உன்னிடம் மட்டும்  ஒரு சிறப்பு குணம் உள்ளது. அதை உன்னிடம் இருந்தே வரும்படி எதிர்பாக்கிறேன் என்று பலாப்பழம் திரட்சியிடம் கூறியது. 


அப்பொழுது திராட்சை, அண்ணா நீங்கள் எல்லோரும் தனித் தனியாகவேய வருகிறீர்கள். தனித் தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால் நாங்களோ கொத்து கொத்தாகவே வளர்கிறோம். கொத்து கொத்தாகவே விற்பனை செய்யப்படுகிறோம். மேலும் நாங்கள் ஒருவர் வாழ்வதற்கான இடத்தை விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். தனித் தனியாக விற்பனைக்கு போவது இல்லை.


மேலும் எங்களை சாப்பிடும்போது கொத்து கொத்தாகவே அழிகிறோம். ஆகவே வளர்விலும், அழிவிலும் ஒற்றுமையாகவே வாழ்கிறோம் மற்றும் அழிகிறோம். அதனால் தான் நாங்கள் சிறந்தவர்கள் என்று அங்கீகாரம் பெற்று உள்ளோம் என்று கூறியது. இதைக் கேட்ட அனைத்து பழங்களும் வெட்கித் தலை குனிந்தன. 


நீதி :- ஒற்றுமை என்றும் பலமாம்.

Previous Post Next Post