ஒரு விதை


நீண்ட காலத்திற்கு முன்னர் பழமுதிர் சோலையை ஒரு மன்னர் ஆண்டு வந்தார். அவர் நீதி நெறி தவறாதவர். உண்மையை பேசுபவர். வாய்மை தவறாதவர். தன்னை போபலவே தன்னாட்டு மக்களும் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். 


ஆனால் இவருக்கு வாரிசு எதுவும் இல்லை. ஆகையால் இவர் வீரம் மற்றும் வலிமையில் சிறந்த 10 ஆட்களை தேர்ந்தெடுத்தார். பிறகு இந்த 10 ஆட்களில் சிறந்த ஒருவனைத் தேர்ந்தெடுக்க ஒரு சிறிய பரீட்சையை கொடுத்தார். அது என்னவென்றால், ஒவ்வொருவரிடமும் ஒரு விதையை கொடுத்து 6 மாதகாலம் அவகாசம் எடுத்து நன்றாக செடியினை வளர்த்து வரும்படி கேட்டுக்கொண்டார். 


அவ்வாறே அந்த 10 தகுதி ஆட்களும் விடை பெற்றனர். அதில் ராமு என்ற ஒருவனுக்கு மட்டும் விதை வளரவில்லை. தன்னால் முடிந்த அளவு முயற்சிகளை எடுத்தும் அவ்விதை வளரவில்லை. 6 மாத காலம் முடிவடைய துவங்கியது. அப்பொழுது ராமு, நாம் அரசரிடம் சென்று உண்மையை கூறிவிடலாம். இதற்காக அரசர் தனக்கு அடியினைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி அரசவைக்கு சென்றான். அங்கு மத்த அனைத்து ஆட்களின் விதைகளும் வளர்ந்து செடியாகி இருந்தன. அரசர் அனைத்து செடிகளையும் பார்த்து புன்னகைத்தார். ஆனால் ராமுவின் விதை வளராததால் அவனை வித்தியாசமாக பார்த்தார். மேலும் ராமுவே இந்நாட்டை எனக்கு அடுத்து ஆளப்போகிறான் என்று அரசவையில் தெரிவித்தார். அப்பொழுது அங்குள்ள அமைச்சர் , எவ்வாறு செடி வளராமல் கொண்டு வந்துள்ள நபரை நீங்கள் அடுத்த அரசராக தேர்வு செய்கிறீர்கள் என்று வினவினார்.

அதற்கு அந்நாட்டின் அரசர், அமைச்சரே, நான் கொடுத்த விதைகள் யாவும் நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்ந்த விதைகள். இதனால் எந்த விதைகளாலும்  வளர இயலாது.  ராமுவைத் தவிர அனைத்து ஆட்களும் அந்த விதையை வீசிவிட்டு வேறு ஏதோ விதையினைக் கொண்டு செடியினை வளர்த்து வந்து இருக்கின்றனர். ராமுவோ விதை வளரவில்லை என்று தெரிந்தும் அவன், 6 மாத காலத்திற்கு முடிந்த அளவு முயன்று இருக்கிறான். இதில் இருந்து அவனது இடை விடாத முயற்சியும் உண்மை நிரந்தகுணமும் தெரிய வருகிறது. இதனால் ராமுவே எனை அடுத்து ஆளப்போகும் இந்த  நாட்டின் அரசனாகும்.





நீதி :- உண்மை வெற்றியைத் தழுவும்.

Previous Post Next Post