வைட்டமின்-K எதற்கு பயன்படுகிறது?


வைட்டமின்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன .உடல் செல்களின் பணிகளுக்கு வைட்டமின்கள் முக்கியமானவை.

வைட்டமின் கே ரத்தம் உறைதல் பணி சீராக நடைபெற அவசியமாகிறது. வைட்டமின்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள், ஏ ,டி ,ஈ ,கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் பி1, பி6 ,பி12 மற்றும் வைட்டமின் சி ஆகும்.

வைட்டமின் கே என்பது ரத்தம் உறைவு, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க, ஆஸ்திரோபோரசிஸிலிருந்து பாதுகாப்பு மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு இன்றியமையாததாகிறது.

வைட்டமின் கே1, கே2 இரண்டுமே ரத்த உறைவுக்கு உதவும் புரதங்களை உருவாக்குகின்றன. ரத்தம் உறைவு அல்லது உறைதல், அதிக ரத்தப்போக்கை உட்புறமாகவும் அல்லது வெளிப்புறமாகவும் தடுக்கிறது. வைட்டமின் கே குறைபாடு இருந்தால் உடலில் போதுமான புரதங்களை உற்பத்தி செய்ய முடியாது. இது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

உணவு மற்றும் உடல் உற்பத்தி செய்யும் இந்த வைட்டமின் கே ஆனது சில மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலைமைகளும் உடலில் உற்பத்தியை குறைக்க செய்துவிடும். இது பெரும்பாலும் பெரியவர்களுக்கு உண்டாகும் குறைபாடாகும்.

வைட்டமின் கே ஆனது ஆண்களுக்கு 120 மைக்ரோகிராமும், பெண்களுக்கு 90 மைக்ரோகிராமும் தினசரித் தேவையாகும்.

அறிகுறிகள்

வைட்டமின் கே குறைபாட்டுக்கான அறிகுறிகள், லேசான காயம், சிராய்ப்பு, நகங்களில் ரத்தப்போக்கு மற்றும் ரத்தக் கட்டிகள் ,உணவுப்பாதையில் ஏதாவது ஒரு இடத்தில் ரத்தப்போக்கு இருப்பது ,சருமம் வெளிறி போவது மற்றும் பலவீனம் .

மலம் கழிக்கும்போது இருண்ட நிறத்தில் ரத்தம் வருவது, ரத்தம் கலந்து வருவது குழந்தைகளுக்கு வைட்டமின் கே பற்றாக்குறைக்கான அறிகுறிகளில் இதைத்தான் முதலில் மருத்துவர்கள் தேடுவார்கள்.

பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி பகுதி அகற்றப்பட்ட இடத்திலிருந்து ரத்தப்போக்கு, தோல், மூக்கு, ஆண்குறி ஆகியவற்றில் ரத்தப்போக்கு போன்றவை எல்லாம் குழந்தைகளுக்கான அறிகுறிகளாகும். சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, எலும்புகள் பலவீனமாக இருப்பது, சருமத்தில் தடிப்பு, குறைவான இதயத் துடிப்பு போன்றவையும் வைட்டமின் கே குறைபாட்டு அறிகுறிகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த விட்டமின் கே குறைபாடு எந்த வயதிலும் உண்டாகலாம்.

குறைபாட்டுக்கான காரணங்கள்

தாய்ப்பாலில் வைட்டமின் கே குறைவாக இருப்பதால், குழந்தைக்கு பற்றாக்குறையாகிறது. வைட்டமின் கே குறைபாட்டினால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, கல்லீரல் நோய், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது ,நோய் தொற்று, ரத்த உறைவு தடுப்புக்குச் சிகிச்சை அளிக்க கொடுக்கும் மருந்துகள் போன்றவை வைட்டமின் கே குறைபாட்டை உண்டாக்கக் காரணமாகின்றன.

வைட்டமின் கே குறைபாட்டை அறிய புரோத்ராம்பின் நேரம் சோதனை, ரத்தப்போக்கு நேரம் உறைவு நேரம் போன்ற சோதனைகள் செய்யப்படுகின்றன.

இரத்தம் உறைவதற்கு 11 முதல் 13 . 5 வினாடிகள் ஆகும். இதை விட அதிக நேரம் எடுத்தால், அது வைட்டமின் கே குறைபாட்டைக் குறிக்கும்.

உணவுகள் மருந்துகள், ஊசி மூலம் விட்டமின் கே குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உணவு வழியாக எனும்பொழுது கீரைகள், பச்சை இலை காய் கறிகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, தாவர எண்ணைகள், அவுரிநெல்லி மற்றும் அத்திப்பழங்கள், சுண்டல், சோயா பீன்ஸ், பச்சை தேயிலை தேநீர் போன்றவை விட்டமின் கே குறைபாட்டைப் போக்கும் உணவுகள் ஆகும் .

அசைவம் சாப்பிடுபவர்கள் இறைச்சி,விலங்குகளின் கல்லீரல் போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.

Previous Post Next Post