மணித்தாள் என்ற ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தார். இவர் ஒழுக்கம், வீரம், நல்ல பண்பு, சுயநலமின்மை, உண்மை, உழைப்பு, உதவி செய்தல் போன்ற அனைத்து நற்பன்புகளையும் கொண்டவர். மேலும் தன் நாட்டு மக்களும் தன்னைப் போல இருக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.

ஒரு நாள் இவருக்கு நல்ல பொழுது போக்கிற்காக ஒரு சில போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வில் வித்தை, வால் வித்தை, குதிரைப் பந்தயம் என்று பல போட்டிகளில் தேர்வுபெற்று மிகுந்த வலிமைகொண்டவராக சின்னமணி, பெரியமணி, சுப்பிரமணி இவர்கள் மூவரும் விழங்கினார். இவர்கள் மூவருக்கும் வலிமையில் சிறந்தவர் என்ற பட்டத்தை கொடுத்து மேலும் இமூவருக்கும் ஒரு ஒரு ஊர் பரிசாக வழங்கப்பட்டது.
இமூன்று ஊர்களைக் கொண்டு இவர்கள் வாழத்துடங்கினர். சின்னமனியோ அவனுக்கு கொடுத்த ஊரில் நிறைய மறக்கான்றுகளை நடுவது.நிறைய குளங்களை அமைப்பது, மேலும் விவசாயத்தை செய்து தனது வாழ்க்கையை தனது அப்பா அம்மாவுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு நீண்ட நாள் வருத்தம் ஒன்று இருந்தது. தன்னால், தன் நண்பர்களைப் போன்று சீக்கிரமாக பெரிய நிலைமைக்கு போக இயலவில்லை என்று.....
பெரியமணியோ குறுகிய காலத்தில் பெரிய பணக்காரர் ஆகி விட வேண்டும் என்று அரசர் கொடுத்த நிலங்களை விற்று அதில் வரும் காசுகளைக் கொண்டு மறுபடியும் மக்களிடம் உள்ள விவசாய நிலங்களை ஏமாற்றி வாங்கி, பணத்தை மேலும் மேலும் பன் மடங்காக்கிக் கொண்டு இருந்தார்.
சுப்பிரமணியோ அரசர் கொடுத்த நிலத்தினை விற்று தன் தேவைக்கு மேல் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செலவு செய்து கொண்டு இருந்தார்.
ஒரு நாள் அரசர் இமூவரையும் தனது அரசவக்கு அழைத்து வர கட்டளை இட்டு இருந்தார். இமூவரும் அவ்வாறே சென்றனர். பிறகு அரசவையில், மன்னர் எல்லோர் முன்பாக, சின்னமணியை தனக்கு அடுத்த நாட்டின் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட சின்னமணி பேரதிர்ச்சிக்கு உள்ளானார்.
அவையில் உள்ள அனைவரும் வினாவினர். எதனால் சின்னமணியை நியமனம் செய்தீர்கள் அரசே? என்று, அதற்கு அரசர் " நான் 6 வருட காலத்திற்கு முன்பு என் பொழுதுபோக்கிற்காக ஒரு சில போட்டியை வைத்தேன் அல்லவா, அது உண்மையில் பொழுது போக்கிற்காக நடத்தப்பட்டது அல்ல, எனக்கு அடுத்து என் ராஜ்ஜியத்தை ஆழ ஒரு நல்ல மனிதரைத் தேர்வு செய்யவே நடத்தப்பட்டது. அதில் இம்மூவரும் சிறந்து விழங்கினார். மேலும் இம் மூவருக்கும் ஒரு ஒரு ஊரினை பரிசாகக் கொடுத்து, மூவரையும் தொடர்ந்து பார்வையிட்டேன்.
சின்னமனியோ கொடுத்த வாய்ப்பினை ஒரு போது தவற விடாமல் எண்ணற்ற மரங்களை நடுவது, குளங்களை அமைப்பது இப்படி நிறைய மக்களுக்கு உதவியாக இருந்தார்.
ஒரு சிறந்த அரசர்க்கான அழகு என்பது மக்களுக்கு நற் பணிகளை செய்வது. இதை சின்னமணி 6 வருட காலமாக என்னை போலவே பணியாற்றி வந்து இருந்து கொண்டு இருந்தார்.
பெரியமணியோ மக்களை ஏமாற்றியும், பேராசை கொண்டவனாகவும் இருந்து வந்தான்.
சுப்பிரமணியோ கொடுத்த வாழ்க்கையை பயணின்றி செலவு செய்வதில் ஆரவம் கொண்டு இருந்து வந்தார்.
ஆகையால் என்னை போலவே, எனக்கு அடுத்து மண்ணிற்கும், மக்களிர்க்கும் உதவி செய்து வந்தவர் சின்னமணியே.... ஆகையால் இவரைத் தவிர வேறு ஒரு சிறந்த தலைமையை நான் காண்பது அரிது என்றுக் கூறி தனது ராஜாங்க பொறுப்புகள் அனைத்தும் சின்னமணியிடம் ஒப்படைத்தார்.
நீதி :-
****
மரங்களை நடுவது, குளங்களை வெட்டி நீரை சேமிப்பது என்பது ஒரு சிறந்த நாட்டை ஆளும் ராஜவிற்கு சமம். ஏனென்றால் நீங்கள் மண்ணிற்கும், அம்மண்ணில் வாழும் மக்களிர்க்கும் பெரும் உதவி செய்கிறீர்கள். ஆகையால் மரங்களை வளர்த்து ஒவ்வொருவரும் சிறந்த ராஜா என்ற பட்டத்தை சூடிக் கொள்வீர்...... 😊😊😊
மேலும் நேர்மையான வழியில் செல்லும் ஒவ்வொருவருக்கும் சின்னமணியைப் போன்று நல்ல வாய்ப்பு ஒன்று கடவுள் வைத்துள்ளார். ஆகையால் அது வரை பொறுமையைக் கை விடாமல் தொடர்ந்து பயணித்து வந்தால், கடவுளின் பலனை அடைய இயலும்.