இந்த ஆண்டு Google I/O டெவலப்பர் மாநாட்டில் புதிய நுகர்வோர் தயாரிப்புகள் முதல் பல்வேறு சேவைகள் பற்றி கூகுள் பல அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த அறிவிப்புகளில் ஒன்றாக நிறுவனம் கூகுள் வாலட் செயலி #GoogleWalletapp பற்றிய தகவலை வெளியிட்டது. கூகுள் வாலட் ஆப் என்பது நிறுவனத்தின் சொந்த டிஜிட்டல் வாலட் பயன்பாடாக இருக்கும். இது நாம் வழக்கமாக நமது பணப்பைகளில் எடுத்துச் செல்லும் இயற்பியல் பொருட்களின் டிஜிட்டல் பதிப்புகளை சேமிக்கும் நோக்கத்திற்காகச் சேவையைச் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
Google Wallet App என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ளலாம்
உலகின் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி மேலும் முன்னேறும் வகையில் உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது Google Wallet செயலியை அறிமுகப்படுத்தப் போவதாக Google அதன் சமீபத்திய மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவல், உணவு, மருந்து அல்லது வேறு எதையும் ஆர்டர் செய்தாலும் ஆன்லைன் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பெரும்பான்மையான மக்களைக் கட்டாயப்படுத்தியது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
புதிய Google Wallet பயன்பாடு பல நோக்கங்களுக்காகச் சேவை செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அவற்றில் ஒன்று பயனர்களின் வங்கி அட்டைகளை சேமிப்பதற்கான ஒரு இடமாகும் Google Wallet app இருக்கும். இது பயனர்களை இன்னும் வேகமாகப் பணம் செலுத்த அனுமதிக்கும். பயனர்கள் அட்டையை எல்லா இடங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால் அதை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க Google Wallet app அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விமான நேரத் தகவலைக் கூட இந்த ஆப்ஸ் அதன் பயனருக்கு வழங்குமா?
இந்த செயலி எதிர்காலத்தில் டிஜிட்டல் ஐடிகளுக்கான ஆதரவையும் கூடப் பெறும் என்று கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் பயனர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் எளிதானது என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பயனர்கள் விமானத்திற்கான போர்டிங் பாஸை Google Wallet app பயன்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும், விமான நேரத்தில் ஏதேனும் தாமதம் அல்லது மாற்றம் அல்லது ரத்துசெய்தல் தகவல் குறித்து இந்த ஆப் உடனே பயனர்களுக்குத் தெரிவிக்கும் என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.
Google Wallet app மற்ற கூகுள் சேவைகளுடன் இணக்கமாக இருக்கும் என்றும் கூகுள் கூறியுள்ளது. ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட தகவலையும் பாதுகாக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இது தவிர, பயனர்கள் டிஜிட்டல் அலுவலகம் மற்றும் ஹோட்டல் சாவிகளையும் இதில் சேமிக்க முடியும். கூகுள் தனது பேமெண்ட்ஸ் ஆப்ஸ் தொடர்ந்து அதன் சேவைகளை வழங்கும் என்று உறுதி செய்துள்ளது. நிறுவனத்திலிருந்து Google Pay தற்போது பயனர்கள் எந்த பரிவர்த்தனைகளையும் செய்ய, பில்களை செலுத்த அல்லது வேறு எந்த செலவுகளையும் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Google Wallet app மற்றும் Google Pay ஆகிய இரண்டு ஆப்ஸ்களும் கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமானது தான் இந்த இரண்டு ஆப்ஸ்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சேவைகளைத் தான் வழங்குவது போல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்த இரண்டு பயன்பற்றிக்கும் வேறுபாடு இருக்கிறது.
#GoogleWalletapp மற்றும் Google Pay இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
#GooglePay ஆப்ஸ் உங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒரே இடத்தில் மேற்கொள்ள அனுமதிக்கும். Google Wallet app உங்கள் ஒட்டுமொத்த வங்கி விபரங்களுடன் இனைந்து அதன் டிஜிட்டல் தகவல் மற்றும் அடையாள தகவலை சேகரித்துச் சேமித்து வைக்கும் பாதுகாப்பான வாலட் ஆக செயல்படும். Google Wallet app