கொரில்லா கிளாஸ் என்றால் என்ன?

 ஸ்மார்ட்போன் பயணர்களின் மத்தியில் அதிகம் பழக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் உண்மையிலே பாதுகாப்பானதா மிக சிறப்பான திடத்தை இந்த கொரில்லா கிளாஸ் பெறுவது எவ்வாறு.



கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் சாதாரன கிளாஸ்களை காட்டிலும் மிக உறுதி தன்மை கொண்டதாகும் , மெல்லிதாக விளங்கினாலும் சிறப்பான பாதுகாப்பினை பெற்றதாகவும் கீறல்கள் தடுக்கும் திறனுடன் எளிதில் உடையாத தன்மையை பெற்றதாக விளங்குகின்றது.


1960 ஆம் ஆண்டில் கார்னிங் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்ணாடியின் உண்மையான பெயர் என்னவென்றால் கெம்கோர் (Chemcor)  ஆகும். ஆரம்ப காலங்களில் மிகவும் வலிமையான கண்ணாடியாக விளங்கினாலும் ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டே வந்தது.


2006 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தொடர்பு கொண்ட கார்னிங் சிஇஓ வென்டெல் வீக்ஸ் முயற்சியில் முதன்முறையாக ஆப்பிள் ஐபோன்களில் ஸ்கிராட்ச்களை தடுக்கும் நோக்கத்தில் இடம்பெற செய்தார்.


அதன் பிறகு பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் , கம்ப்யூட்டர் லேப்டாப் தொலைக்காட்சி  மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக் கருவிகளில் கொரில்லா கண்ணாடி தனது பலத்தால் சந்தையை ஆக்கிரமித்தது.


சாதாரன கிளாஸ்களை காட்டிலும் கூடுதல் வலுமிக்க இந்த கிளாஸ்களில் அதிகப்படியான வேதிப்பொருட்களின் சேர்க்கையாலே கடினமைகின்றது இந்த கிளாசில் அமைந்துள்ள alkali-aluminosilicate மிக சிறப்பான கடினதன்மைக்கு உதவிகரமானதாக அமைகின்றது.


நிச்சியமாக இந்த கண்ணாடி உடைக்கப்பட முடியும் ஆனால் மற்ற கண்ணாடிகளை போன்று விரைவாக உடைக்க முடியாது.


சாதாரன கிளாஸ் காட்டிலும் கூடுதல் பலம் வாயந்தது. அதிக கடினதன்மை கொண்டது ஸ்கிராட்சுகளை தாக்குபிடிக்கும் சாதாரன 10மிமீ தடிமன் கொண்ட கண்ணாடியை காட்டிலும் 2மிமீ கொரில்லா கண்ணாடி கடினமானதாகும்.


அதிகப்படியான கெமிக்கல். மிக கடினமான தயாரிப்பு முறை இதன் தயாரிப்பு முறைக்கு அதிப்படியான ஆற்றல் தேவை உலகயளவில் கோடிகணக்கான எலக்ட்ரானிக் கருவிகளில் இடம்பெற்றுள்ள கொரில்லா கண்ணாடி ஃபோர்டு  ஜிடி காரிலும் பயன்படுத்தப்படுகின்றது.

Previous Post Next Post