ஜிபிஎஸ் அமைப்பை வலுப்படுத்த இஸ்ரோவின் ககன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

 #GAGANGPS


இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது என்றே கூறலாம். இந்நிலையில் இஸ்ரோ உருவாக்கி இருக்கும் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதன்முறையாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளது.



வானில் பறக்கும் விமானங்களின் துல்லியமான இருப்பிடம் முதல் ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் மேப் வரை அமெரிக்காவின்

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தான் கூறவேண்டும்.

 


ஆனால் இந்த ஜிபிஎஸ் முற்றிலுமாக அமெரிக்காவின் ராணுவ கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த தொழில்நுட்பத்தை செயலிழக்க செய்வதற்கான முழு உரிமை அமெரிக்காவிற்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சொந்தமாக நேவிகேஷன் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டதன் விளைவாக IRNSS மற்றும ககன் போன்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ அமைப்பு உருவாக்கியுள்ளது. 


குறிப்பாக இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இதற்கான பிரத்யேக செயற்கைக்கோளையும் இஸ்ரோ அனுப்பியுள்ளது. 


ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் விமான நிலையத்தில் இண்டிகோ VTR-72 விமானம் இந்த ககன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிறங்கியது.


ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் விமான நிலையத்தில் இண்டிகோ VTR-72 விமானம் இந்த ககன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிறங்கியது.

 

இஸ்ரோவின் இந்த தரமான தொழில்நுட்பம் மூலம் விமான தாமதமாகும் நேரம் குறையும் எனவும் எரிபொருள் சிக்கனம் மற்றும் விமானம் பாதுகாப்பு மேம்படும் எனவும் விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.


இந்த திட்டத்தினை நடப்பு ஆண்டு ஆகஸ்டில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது

Previous Post Next Post