PayPal கணக்கு எப்படி துவங்குவது? எப்படி பணம் பெற்றுக்கொள்வது?

 PayPal அக்கவுண்ட் இந்தியாவில துவங்குவது மிக எளிது

PayPal

                                                       https://www.paypal.com/

நீங்களே உங்கள் மொபைலில் இருந்தோ அல்லது கணினியில் இருந்தோ சில நிமிடங்களில் Payapal அக்கவுண்ட் உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு யார் உதவியும் தேவை இல்லை.

PayPal அக்கவுண்ட் துவங்க உங்களிடம் முக்கியமாக இருக்க வேண்டியவை

தனி நபர் கணக்கு (Individual Account) துவங்க :

  1. PAN கார்டு
  2. Bank அக்கவுண்ட் ( IFSC குறியீடு (Code) கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்)
  3. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு (PayPal வழியாக பணம் செலுத்துபவராக அல்லது பொருட்கள் வாங்குபவராக இருந்தால் மட்டும்)
  • வெளிநாடு பணம் மட்டும் பெருபவராக இருந்தால் ("Receive Only International Payments") எந்த கோப்புகளும் பதிவேற்றம் (Upload) செய்ய தேவையில்லை.
  • நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகிய இரண்டு வகையிலும் பணம் பெருபவராக இருந்தால் (Receive Local and International Payments) மட்டும் கீழே குறிப்பிட்டுள்ள கோப்புகளை பதிவேற்றம் (Upload) செய்ய தயாராக வைத்திருங்கள்.
  • "Receive Local and International Payments" Option தொழில் செய்பவர்களுக்கு (Business Man) ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தான் தேவை
  • தெளிவாக Scan செய்யப்பட்ட PAN கார்டு , ஆதர் கார்டு (Aadhar Card) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Licence) அல்லது பாஸ்போர்ட் (Passport) அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Voter IDமற்றும் Bank Statement அல்லது Cancelled Cheque அல்லது Bank PassBook இவை அனைத்தையும் PDFஅல்லது JPEG கோப்பு வகையில் (File Format) பதிவேற்றம் (Upload) செய்ய தயாராக வைத்திருங்கள்.

தொழில் முறை கணக்கு (Business Account) துவங்க :

  1. PAN கார்டு
  2. Bank அக்கவுண்ட் ( IFSC குறியீடு (Code) கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்)
  3. டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு (PayPal வழியாக பணம் செலுத்துபவராகா அல்லது பொருட்கள் வாங்குபவராக இருந்தால் மட்டும்)
  4. தெளிவாக Scan செய்யப்பட்ட PAN கார்டு மற்றும் GST சான்றிதழ் (GST Certificate) மற்றும் ஆதர் கார்டு (Aadhar Card) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Licence) அல்லது பாஸ்போர்ட் (Passport) அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Voter IDமற்றும் Bank Statement அல்லது Cancelled Cheque அல்லது பங்க் PassBook இவை அனைத்தையும் PDFஅல்லது JPEG கோப்பு வகையில் (File Format) பதிவேற்றம் (Upload) செய்ய தயாராக வைத்திருங்கள்.

PayPal அக்கவுண்ட் எப்படி துவங்குவது ஒவ்வொரு Stepகளாக பார்ப்போம்:

Step 1 :

Sign up for your free PayPal Account - PayPal India

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து PayPal பக்கத்திற்கு செல்லவும்

Step 2 :

PayPal

இணைய பக்கத்தில் "Sign Up For Free" என்று இடது பக்கம் கீழே உள்ள பட்டனையோ அல்லது வலது பக்கம் மேல் உள்ள "Sign Up" பட்டனையோ கிளிக் செய்யவும் . க்கிக் செய்தவுடன் உங்களை " புது கணக்கை உருவாக்கும் பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்"

Step 3:

PayPal
PayPal

உங்களுக்கு Personel Account வேண்டுமா அல்லது Business Account வேண்டுமா என்பதை தேர்வு செய்து "Next" பட்டனை கிளிக் செய்யவும் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்

குறிப்பு :

  • Business Accountஐ தேர்வு செய்தால் உங்கள் தொழில் மற்றும் GST பற்றிய விவரங்கள் பதிவிட வேண்டி இருக்கும்.
  • ஒரு PAN கார்டுக்கு ஒரு Personel Account மற்றும் ஒரு Busines Account மட்டுமே உருவாக்க முடியும்

Step 4:

இந்த பக்கத்தில் உங்களின் ஈமெயில் முகவரி (Email Address) மற்றும் மொபைல் எண் (Mobile Number) ஆகியவற்றை வழங்க வேண்டும் பின்னர் கடவு சொல்லை (Password) உருவாக்க வேண்டும்

PayPal
  • கடவு சொல்லில் குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும் அந்த 8 எழுத்துகளில் கீழே குறிப்பிட்டுள்ள எழுத்துகளில ஒவ்வொன்றிலும் ஒரு எழுதாவது இருக்க வேண்டும்
    • 1 பெரிய எழுத்து (Capital Letter) [ A - Z ]
    • 1 சின்ன எழுத்து (Small Letter) [ a - z ]
    • 1 எண் ( Number) [ 0 - 9 ]
    • 1 சிறப்பு எழுத்து (Special Character) [ * @ # & + ]

பின்னர் "Next" பட்டனை கிளிக் செய்யவும் அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்

Step 5 :

PayPal

உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும் அதை சரியாக பதிவிட்டால் அடுத்த பக்கத்திற்கு தானாக செல்லும்.

Step 6:

இந்த பக்கத்தில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை (Personel Information) பதிவிட சொல்வார்கள்

PayPal

இதில் உங்களது First Name மற்றும் Last Name PAN கார்டில் உள்ளது போலவே உள்ளிட வேண்டும்

PayPal
PayPal

உதாரணமாக PAN வார்டில் உங்கள் பெயர்

  • V Pravin Kumar என்று பெயர் இருந்தால்
    • First Nameல் Viveganandan என்று உங்கள் "தந்தையின் முழு பெயரை" உள்ளிடவும்
    • Last Nameல் Pravin Kumar என்று "உங்களின் பெயரை உள்ளிட வேண்டும்
PayPal

பின்னர் உங்களின் முழு முகவரி விவரஙகளை உள்ளிட்டு

PayPal

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் தேர்வு செய்து "Agree and Create Account" பட்டனை கிளிக் செய்யவும்.

Step 7 :

PayPal
  • டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை உள்ளிடாமல் Skip பட்டனை கிளிக் செய்யவும்
    • நீங்கள் "வேறு ஒருவருக்கு பணம் செலுத்துபவராகவோ " அல்லது "PayPal வழியில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவராகவோ"இருந்தால் மட்டும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு தகவல்களை இணைத்தால் போதும்
  • Skip Button இல்லை என்றால் PayPal லோகோவை (LOGO) கிளிக் செய்யவும்
PayPal
  • அதுவும் வேலை செய்யவில்லை என்றால் URL barல் PayPal.com என்று type செய்து உங்கள் முகப்பு பக்கத்திற்கு (Home Page) செல்லவும்.

Step 8 :

PayPal
  • உங்கள் முகப்பு பக்கத்தில (Home Page) Confirm Email என்பதை கிளிக் செய்யவும்
PayPal
  • Send E-mail பட்டனை கிளிக் செய்யவும்
PayPal
  • உங்கள் ஈமெயில் முகவரிக்கு (Email Address) அனுப்பப்படும் சரிப்பார்ப்பு ஈமெயிலை (Verification Email) கிளிக் செய்து Click To Verify என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஈமெயில் சரிபார்ப்பை (Email Verification) நிறைவு செய்யவும்

Step 9 :

  • பின்னர் உங்கள் அக்கவுண்ட்டில் Login செய்து
PayPal
  • Payment Methods என்ற Menuவிற்கு செல்லவும்
  • Link A Card Or Bank என்னும் பட்டனை கிளிக் செய்யவும்
  • அடுத்து வரும் பக்கத்தில்
PayPal
  • Link A Bank Account என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
PayPal
PayPal
  • உங்களின் பண பரிவர்த்தனை செய்வதற்கான 🏦 Bank தகவல்களாக உங்களின் Bank அக்கவுண்ட் எண் (Account Number) மற்றும் Bank IFSC குறியீடு (Code) உள்ளிட்டவற்றை பதிவு செய்யுங்கள்
  • பின்னர் Link Your Bank என்னும் பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களுக்கு PayPal இரண்டு வேலை நாட்களுக்குள் (Working Daysஇரண்டு சிறிய அளவிலான பணம் (Two Small Deposits) உங்கள் அக்கவுண்ட்டிற்கு செலுத்துவார்கள்
    • அந்த பணம் உங்கள் Bank அக்கவுண்ட்டிற்கு வந்தவுடன் எவ்வளவு வந்தது என்று PayPal அக்கவுண்ட்டில் Login செய்து
    • Payment Methods என்ற Menuவிற்கு செல்லவும்
PayPal
    • 🏦 Bank அக்கவுண்ட் menuவை கிளிக் செய்யவும்
PayPal
PayPal
    • அடுத்த பக்கத்தில்"Verify Bank Account" என்ற பட்டனை கிளிக் செய்யவும்
PayPal
    • பின்னர் உங்களின் Bank அக்கவுண்ட்டிற்கு PayPal மூலம் வந்த இரண்டு பணத்தின் மதிப்புகளை சரியாக பதிவிட்டு "Confirm" என்ற பட்டனை கிளிக் செய்யவும் இதை சரியாக செய்தால் மட்டுமே உங்கள் Bank அக்கவுண்ட் பண பரிவர்த்தனை செய்வதற்கு "Activate" செய்யப்படும்

Step 10 :

மிக முக்கியமான கடைசி Step இதுதான்

  • நீங்கள் "வேறு இணையதளங்களில் இருந்தும் உங்கள் நண்பர்களிடம் இருந்தும் பணைத்தை PayPal வழியில் பெற்று உங்கள் Bank அக்கவுண்ட்டிற்கு தானாக சென்றடைய (Automatic Transfer) வேண்டும் என்றால் KYC சரிபார்ப்பு (Verification) செய்ய வேண்டும்
  • அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து PayPal அக்கவுண்ட்டில் Login செய்து

KYC - Know Your Customer - PayPal India

PayPal
PayPal
  • இந்த பக்கத்தில் " Receive Only International Payments" மற்றும் "Receive Local and International Payments" என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்
  • "Receive Local and International Payments" Option தொழில் செய்பவர்களுக்கு (Business Man) ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தான் தேவை
  • மற்ற அனைவருக்கும் " Receive Only International Payments" என்ற ஆப்ஷனை தேர்வு செய்தாலே போதும்.

Step11: (இந்த Step " Receive Only International Payments" Option Select செய்பவர்களுக்கு மட்டும்)

PayPal
  • " Receive Only International Payments" என்ற ஆஆப்ஷனுக்குகீழே உள்ள "Complete KYC " என்ற பட்டனை கிளிக் செய்யவும்
  • அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்
PayPal
  • இந்த பக்கத்தில் "Get Strated" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்
  • அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்
PayPal
  • "Personal Information" என்னும மெனுவை Select செய்யவும்
  • அதில் பான் கார்டு எண்ணை (PAN Card Number) பதிவிடவும்
PayPal
PayPal
  • உங்கள் முகவரியை Drop down பாக்ஸில் இருந்து Select செய்யவும்
  • பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்
PayPal
  • பின்னர் Purpose Code மெனுவை Select செய்யவும்
PayPal
  • நீங்கள் ஆன்லைன் freelance வேலை பார்பதற்கு சம்பளம் பெற வேண்டும் என்றால்
  • "Market Research and Public Opinion Polling Service " என்ற நோக்க குறியீடை(Purpose Code) தேர்வு செய்யுங்கள்
PayPal
  • பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்
PayPal

Step12: (இந்த Step "Receive Local and International Payments"Option Select செய்பவர்களுக்கு மட்டும்)

  • தெளிவாக Scan செய்யப்பட்ட PAN கார்டு , ஆதர் கார்டு (Aadhar Card) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Licence) அல்லது பாஸ்போர்ட் (Passport) அல்லது வாக்காளர் அடையாள அட்டை (Voter IDமற்றும் Bank Statement அல்லது Cancelled Cheque அல்லது பங்க் PassBook இவை அனைத்தையும் PDFஅல்லது JPEG கோப்பு வகையில் (File Format) தயாராக வைத்திருங்கள்.
  • ஒவ்வொரு Documentடையும் ஒவ்வொரு இடத்தில் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்
PayPal
  • "Receive Local and International Paymentsஎன்ற Optionக்கு கீழே உள்ள "Complete KYC " என்ற பட்டனை கிளிக் செய்யவும்
  • அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்
Paypal
  • இந்த பக்கத்தில் "Aggree and Get Strated" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்
  • அது உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும்
  • "Proof Of Identify" என்னும மெனுவை Select செய்யவும்
Paypal
  • அதில் பான் கார்டு எண்ணை (PAN Card Number) பதிவிடவும்
Paypal
  • பின்னர் உங்களின் பான் கார்டு (PAN Card) PDF அல்லது JPEG கோப்பு வகையில் (File Format) உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் (Uplad) செய்யுங்கள்
  • பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்
Paypal
  • "Proof Of Address" என்னும மெனுவை Select செய்யவும்
  • உங்கள் முகவரியை Drop Down பாக்ஸில் இருந்து Select செய்யவும்
Paypal
  • Address Proofக்கு நீங்கள் எந்த Document JPEG அல்லது PDF Format தயாராக வைதுள்ளிர்களோ அதை Drop பாக்ஸில் Select செய்யவும்
  • பின்னர் உங்களிடம் உள்ள PDF அல்லது JPEG கோப்பு வகையில் (File Format) உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் (Uplad) செய்யுங்கள்
Paypal
  • பின்னர் "Submit" பட்டனை கிளிக் செய்யவும்
Paypal
  • "Proof Of Bank" என்னும Menuவை Select செய்யவும்
Paypal
  • Bank Proofக்கு நீங்கள் எந்த Document JPEG அல்லது PDF Format தயாராக வைதுள்ளிர்களோ அதை Drop பாக்ஸில் Select செய்யவும்
  • பின்னர் உங்களிடம் உள்ள PDF அல்லது JPEG கோப்பு வகையில் (File Format) உள்ள புகைப்படத்தை பதிவேற்றம் (Uplad) செய்யுங்கள்
Paypal
  • பின்னர் "Submit" பட்டனை கிளிக் செய்யவும்
  • பின்னர் "Bank Account Proofக்கு" கீழே உள்ள "Purpose Code" Menuவை Select செய்யவும்
Paypal
Paypal
  • உங்களுக்கு உகந்த நோக்க குறியீடை(Purpose Code) தேர்வு செய்யுங்கள்
Paypal
  • பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்

இப்போது உங்கள் PayPal அக்கவுண்ட் முழுமையாக சரிபார்ப்பு (Fully Verified Account) செய்யப்பட்டிருக்கும்

உங்கள் ஈமெயில் முகவரியே (Email Address) உங்களின PayPal அக்கவுண்ட் ID-யாக செயல்படும்

நீங்கள் ஒரு PayPal அக்கவுண்qடில் 6 ஈமெயில் முகவரிகள் (Email Addresses) வரை இணைத்து பயன்படுத்தலாம்

இனி நீங்கள் "ஆன்லைன் இணையதளங்களில் இருந்தும் நண்பர்கள் உறவினர்களிடம் இருந்தும்PayPal வழியாக பணம் பெறலாம்

முக்க்கிய குறிப்பு :

  • ஒரு PAN கார்டுக்கு ஒரு Personel Account மற்றும் ஒரு Busines Account மட்டுமே உருவாக்க முடியும்.
  • உங்கள் PayPal அக்கவுண்ட்டை delete செய்துவிட்டு மீண்டும அதே email முகவரியை பயன்படுத்தி புது அக்கவுண்ட் உருவாக்க வேண்டும் என்றால் உங்கள் பழைய அக்கவுண்ட்டை delete செய்த நாளில் இருந்து 2 வாரங்கள் கழித்தே உருவாக்க முடியும்.
  • உங்கள் பழைய PayPal அக்கவுண்ட்டை delete செய்துவிட்டு அதே bank அக்கவுண்ட்டை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை மட்டுமே புது அக்கவுண்ட் உருவாக்க முடியும். மூடிராவது முறை முயற்சி செய்தால் உங்களின் bank அக்கவுண்ட் block செய்யப்படும். நீங்கள் வேறு ஒரு bank அக்கவுண்ட்டை தான் பயன்படுத்த வேண்டியிருக்கும்
Previous Post Next Post