உடல் எடை குறைய 'ஆளி விதைகள்' (Flax Seeds)...!

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இதை மூன்று வாரம் குடிங்க!

சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது. இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான். உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது. ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும். மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது. மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. இதை நீங்கள் பின்பற்றி வருவதால் உடலில் நேர்மறை விளைவுகள் நிறைய உண்டாகும். ஆளிவிதைகள்..! உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ கட்டாயம் இடம் பிடித்திருக்கும். சமீப காலமாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள், தொப்பைக் குறையும்’ என்று அறிவுறுத்துகின்றனர். சிலர் சாலட்டில் தூவியும் இதை உட்கொள்கின்றனர். எங்கே கிடைக்கும் இந்த ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்? எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். அப்படியானால், இது வெளிநாடுகளில் விளையும் விலை உயர்ந்த உணவா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். இதனை `ஆளி விதை’ (Flax Seeds) என்று கூறுவார்கள். ஆனால் இதன் மகிமையை நம்மைவிட வெளிநாட்டினர் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் இது இடம் பிடித்திருக்கும். ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது. மேலும் இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது. முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள். இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள். மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள். அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும். மறவாமால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.. ஆளி விதை மில்க் ஷேக் : தேவையானவை : தேங்காய் பால் - 1 கப் ஆளிவிதைப் பொடி - 2 டீஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி - 1 கப் வாழைப்பழம் - 2 துண்டுகள் தேன் - 2 டீஸ்பூன். செய்முறை : மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பிறகு, அதை ஒரு கிளாஸில் ஊற்றி , தேவைப்பட்டால் உலர் பழங்கள், துண்டாக நறுக்கியப் பழங்களை சேர்த்தும் பருகலாம். ஆளிவிதை மில்க் ஷேக் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் தரும். குறிப்பு: கருவை சிதைக்கக்கூடிய தன்மை கொண்டது ஆளிவிதை. அதனால் கர்ப்பக்காலத்தில் ஆளிவிதையை உட்கொள்வதை தவிர்க்கவும். சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால் ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் ஆளிவிதை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

Previous Post Next Post