ஆயுர்வேத முறைப்படி சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியுமா?

 உணவே மருந்து.இந்த முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்:

பூண்டு, பாகற்சாறு, வில்வ இலைகள், சிறுகுறிஞ்சான், வேப்பிலை, மஞ்சள், நாவல் பழக்கொட்டை, சர்க்கரை கொல்லி, நிலவேம்பு, வெந்தயம், திரிபலா சூரணம்.

இந்த மூலிகைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கசாயமாக்கி எடுத்துக் கொள்ளலாம்.எளிதாக கிடைக்கக்கூடியவை.

பூண்டு, வெந்தயம் அன்றாட சமையலில் இடம் பெறுகின்றன.அதிகாலையில் 2 பூண்டு பற்களை மென்று சாப்பிட்டால், நீரிழை கட்டுக்குள் வைக்கும்.

வேப்பிலை, துளசி , வில்வம் போன்றவை நோய் தீர்க்கவும், சிகிச்சை அளிக்கப்படவும் உதவும் பொதுவான மூலிகைகள். இவை உடலில் இன்சுலின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த மூன்றையும் சேர்த்து சாறு எடுத்து கலந்த கலவையை இரத்த சர்க்கரை அளவு குறைப்பதற்காக வெறும் வயிற்றில் தண்ணீருடன் குடிக்கலாம்.

துளசியும், வேப்பிலையும்

பத்து வேப்பிலை கொழுந்து இலைகள், 10 துளசி இலைகள் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

பாகற்காய் சாறு

சர்க்கரை நோயின் எதிரியாக கருதப்படுவது பாகற்காய் ஆகும் இது சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது தட்டத்தை சுத்திகரித்து சுத்தமான ரத்தத்தை உடலுக்கு செலுத்தும் பாகற்காய் சாற்றி தினமும் 30 எம் எல் குடித்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

நாவல் விதைகள், இலைகள்

பொதுவாகவே நாவல் பழங்கள் மற்றும் அதன் இலைகள் விதைகள் ஆகியவை மிக மருத்துவ முகாம் கொண்டவை உள்ளவர்கள் இதன் நிலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை அளவு கற்றுக் கொள்ளும் வரும் மேலும் இதன் விதைகளை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை தீர்க்கும் .

திரிபலா

ஆயுர்வேதத்தில் மிக முக்கிய மருந்தாக பயன்படுவது திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை ஆகும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உடலை சீராக வைக்க உதவுகிறது. தினமும் இவற்றை வ வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

ஆலமரப்பட்டை

ஆலமர பட்டையில் இருக்கும் மகத்துவம் மிகப்பெரியது. ஆலமரப்பட்டையை 20 கிராம் எடுத்து நான்கு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, பின் ஒரு டம்ளர் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

இலவங்கப் பொடி

வீட்டு மருத்துவமாகவும், ஆயுர்வேத மருத்துவமாகவும் கருதப்படும் இந்த லவங்கம் ,மிகவும் எளிமையான ஒன்றாகும். இதன் மூலம் சர்க்கரை நோயை சுலபமாக குணப்படுத்த முடியும். தினமும் மூன்று தேக்கரண்டி லவங்கப்பொடியை ஒரு லிட்டர் நீரில் கொதிக்க விட்டு ,வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் கலவையானது நீரிழிவு நோய்க்கு எதிரான சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

முருங்கை இலைகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். தினமும் காலையில் இந்த சாறு குடிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு

அதிக மருத்துவ குணம் கொண்ட கனிகளில் ஒன்று நெல்லிக்கனி. மிகவும் பிரசித்தி பெற்றது. உடலின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. தினமும் 20ml நெல்லி சாற்றை குடித்து வந்தால் நீரழிவு நோயிற்கு சிறந்த மருந்தாகும். மேலும் இது ரத்தத்தை சுத்தி செய்யவும் பயன்படுகிறது.

வெந்தயம்

அதிகமான சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான மருந்து வெந்தயம். இந்த வெந்தயம் ஆயுர்வேதத்தில் முதன்மையாக கருதப்படுகிறது. முதல் நாள் இரவு முழுவதும் மிதமான நீரில் ஊறவைத்த வெந்தயத்தை, அடுத்த நாள் எடுத்து அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

ஒரு சில மூலிகைகள் கலவை சிறந்த மருந்தாக விளங்குகின்றது. அந்த வகையில் கற்றாழை ,பிரியாணி இலை, மஞ்சள் இவை மூன்றும் சேர்ந்தது அருமையான மருந்தாகும்.

மஞ்சள் மற்றும் பிரியாணி இலை பொடியை அரை தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, அத்துடன் ஒரு தேக்கரண்டி கற்றாழை சேர்த்து கலந்து ,இதை மதியம் ,இரவு உணவு உண்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம்.

மருத்துவ ஆலோசனை

எந்த ஒரு மருந்தையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது மிகச் சிறந்த முறையாகும். குறிப்பாக மருத்துவர் சர்க்கரை நோயாளிகள் தங்களின் சர்க்கரை அளவை பரிசோதித்த பிறகு இவற்றை உண்ணலாமா வேண்டாமா என கூறுவர். மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது .இது இன்றியமையாததாகும்.

Previous Post Next Post