அத்திப்பழத்தின் பயன்கள் என்ன?

 

கூம்பு வடிவில் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகள் பற்றி அறிவது சிறப்புதான்.

அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது.ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் தற்போது கிடைக்கிறது.

Benifits of Fig

சத்துக்கள்

மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி ,சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர் அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால் எண்ணற்றப் பலன்களை பெறலாம்.

ஆன்டி -ஆக்சிடென்ட்கள்

மற்ற பழங்களை ஒப்பிடும்போது, இதில் முதல் தரமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது.

வலுவான எலும்புகள்

Strong Bone

ஒரு உலர்ந்த அத்திப்பழம் ஆனது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் மூன்று சதவீதத்தை வழங்குகிறது. இதனால் தினமும் இதனை உட்கொள்ளும் பொழுது எலும்புகள் வலுப்படுகின்றன.

நீரிழிவு

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும் சர்க்கரை அதிகம் இருப்பதனால் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பின்னர் எடுத்துக் கொள்வது நல்லது .

மலச்சிக்கல் நீங்கும்

3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துகளின் அளவுகளில் 20 சதவீதத்தை தருகிறது. எனவே இதை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் ,செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.

Fig

இரத்த சோகை

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதனால், தினமும் உட் கொள்ளும்போது இரத்த சோகப் பிரச்சனை தீரும். ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் அன்றாடம் தேவைப்படும் இரும்புச் சத்தில் இரண்டு சதவீதம் கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்வதற்கு இரும்பு சத்து மிகவும் இன்றி அமையாதது.

இரத்த அழுத்தம்

உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும்போது சோடியத்தின் அளவு உடலில் அதிகரிக்கிறது இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் ஒரு கிராம் அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மில்லி கிராம் சோடியம் உள்ளது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கலாம்.

புற்றுநோய்

Weight loss - Fig

அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களால் ப்ரீ ரேடிக்கல்களின் மூலம் டி .என். ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் வரும் அபாயம் குறையும் .

எடை குறைய

நார்ச்சத்து அதிகம் இருப்பது மட்டுமல்லாமல் கலோரிகளும் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தின் 47 கலோரிகள் உள்ளது .மற்றும் 0.2 கிராம் கொழுப்பு உள்ளது .எனவே எடையை குறைக்க நினைப்போர் இதனை உட்கொள்ளலாம்.

இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்

அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஒரு பாலுணர்வை தூண்டும் பழம். அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கு காரணம் அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க் , மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

இதய நோய்

Fig

அத்திப்பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் இருப்பதினால், இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், இதய நோய்வாய்ப்பும் குறைகிறது.

அழகான சருமம்

தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு இளமையாகவும் இருக்கலாம்.


Previous Post Next Post