வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன?

 வெங்காயத்தின் பூர்விகம் மத்திய ஆசியா என்று நம்பப்படுகிறது. சில ஆராய்ச்சிகள் வெங்காயம் ஈரான் மற்றும் மேற்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டது என தெரிவிக்கின்றன.

வெங்காயத்தின் அறிவியல் பெயர் அல்லியம் செப்பா ஆகும். வெங்காயம் அதன் அளவு, நிறம், சுவை பொறுத்து பல வகைகளாக காணப்படுகிறது.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வகை வெங்காயங்கள் வகைகளை விட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவைகளாக கருதப் படுகிறது.

வெங்காயம் அதிகம் சாப்பிட்டால்
வெங்காயம் அதிகம் சாப்பிட்டால்

வெள்ளை வெங்காயத்தை விட மஞ்சள் வெங்காயத்தில் கிட்டத்தட்ட 11 மடங்கு அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதாக கருதப் படுகிறது.

உலக அளவில் சீனாவில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா மற்றும் எகிப்தில் அதிக அளவு பயிரிடப் படுகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் அதிக அளவு பயிரிடப் படுகிறது.

வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் :

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது.

கால்சியம், இரும்புச்சத்து மற்றும் தரமான புரத சத்தும் உள்ளது.

மிக குறைந்த அளவு சோடியம் மற்றும் பூஜ்ய அளவு கொழுப்பு உள்ளது.

வெங்காயத்தில் குர்செடின், ஃபிளாவனாய்டு எனப்படும் ஒரு வகை ஆக்ஸிஜனேற்ற சல்பர் சேர்மங்கள் உள்ளன. மேலும் வெங்காயத்தில் ஆர்கனோசல்பர் கலவைகள் உள்ளன.

வெங்காயம் 100 கிராமில் 40 கலோரிகள் உள்ளன. அதில் 0.1 கிராம் கொழுப்பு, 1.1 கிராம் புரதம் மற்றும் 9.3 கிராம், 1.7 கிராம் நார் சத்து, கார்போஹைட்ரேட் உள்ளது.
வெங்காயம் 100 கிராமில் 7.4 மில்லி கிராம் வைட்டமின் சி, 0.02 மில்லி கிராம் வைட்டமின் இ மேலும் 0.04 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது. வெங்காயம் 100 கிராமில் 0.21 மில்லி கிராம் இரும்புச் சத்து, 23.00 மில்லி கிராம் கால்சியம் மற்றும் 146 மில்லி கிராம் பொட்டாசியமும் உள்ளன.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்ற இரண்டு வகைகள் தென்னிந்திய உணவுகளில் இடம் பெறுவன.

வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயச் சாற்றில் உள்ள குர்செடின் என்னும் சேர்மம் வீக்கம் மற்றும் பிற ஒவ்வாமைகளையும் எதிர்த்துப் போராடுகிறது. புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும். குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவி வர வலி குணமாகும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு.

வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது :

வெங்காயத்தில் செலினியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். செலினியம் குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் உள் செயல் முறைகளால் சேதப் படுகின்றன. செலினியம் சேதம் அடைந்த செல்களை புதுப்பிக்க உதவும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்று தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

பார்வை ஆரோக்கியம் :

வெங்காயச் சாற்றின் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை கண் நோய்த் தொற்றுகளான கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் பிளெஃபரிடிஸ் போன்றவற்றிற்கு எதிராக செயல் படுகின்றன. ஆய்வக சோதனைகளில், வெங்காய சாறு கண்ணில் கண்புரை வளரும் வாய்ப்பை குறைக்கிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.

நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள்

வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகளான குர்செடின் மற்றும் குரோமியம் ஆகியவை நீரிழிவு எதிர் பண்புகளை கொண்டுள்ளன.

2014 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு மெட்டா பகுப்பாய்வில் வகை 2 நீரிழிவு நோயாளிகளால் பாதிக்கப் பட்டவர்கள் வெங்காயம் சாப்பிட்ட பிறகு சிறந்த கல்லீரல் நொதிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் மதிப்புகள் இருப்பதாகவும் காட்டியது.

மேலும் சல்பர் கலவைகளான குர்செடின் கல்லீரல், சிறுகுடல், கணையம், தசைகள் மற்றும் கொழுப்பு திசுக்களின் உயிரணுக்களுடன் தொடர்பு கொள்வதன் உடல் முழுவதும் இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதாக தெரிய வந்துள்ளன.

கொழுப்பு தொப்பையை குறைக்கிறது :

11β ஹைட்ராக்ஸிஸ்டீராய்டு டீஹைட்ரோஜினேஸை எனும் நொதியை கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய ஒரு சில பொருட்களில் குர்செடின் ஒன்று என்று கருதப்படுகிறது.இந்த நொதியானது கொழுப்பு செல்களில் சேமிக்கப்பட்டுள்ள கார்டிசோலை மீண்டும் செயல்படுத்துவதன் மூல்ம் கொழுப்பு உருவாவதை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம்.

மூளை ஆரோக்கியம் :

வெங்காயம் சாப்பிடுவதால் மூளையில் இரத்த ஓட்டதை ஊக்குவிக்கிறது மற்றும் மூளையில் நீர் தேங்குவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளே இதன் காரணம்.

செலனியச் சத்து குறைபாடு இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

எலும்புகளை பலப் படுத்துகிறது :

வெங்காயம் எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. அமெரிக்க விவசாயத் துறை (USDA) கூற்றின் படி ஒரு வெங்காயத்தில் 25.3 மி.கி கால்சியம் உள்ளது. கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பிற எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். வெங்காயம் தினசரி உணவில் சேர்த்து வர சிறந்த எலும்பு ஆரோக்கியம் கிடைக்கும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

முடி வளர்ச்சியை தூண்டுகிறது :

வெங்காய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வேர் கால்களுக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை தூண்டுக்கிறது.

வெங்காயம் சாறில் உள்ள கந்தகம் பொடுகு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற முடி சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்கி வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியம் :

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.

வெங்காயத்தில் உள்ள இனுலின் எனும் சேர்மம் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், இரத்த சர்க்கரையை ஒழுங்குப் படுத்துவதற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்து வதற்கும், எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்து வதற்கும் உதவி செய்கிறது. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

சிறுநீரக நலம்:

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

கொலஸ்ட்ராலைக் கட்டுப் படுத்துகிறது :

வெங்காயத்தில் உள்ள அல்லியினேஸ் என்னும் சேர்மம் கொழுப்பைக் குறைக்கவும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

வெங்காயத்தை துண்டுகளாக வெட்டும் போது அதில் உள்ள அல்லிஇன்ஸ் வெளியிடப் படுகிறது. வெங்காயம் வெட்டப் படும் போது கண்களில் கண்ணீர் வருவதற்கு காரணம் இந்த அல்லிஇன்ஸ் எனும் சேர்மம் ஆகும்.

மேலும், வெங்காயத்தில் உள்ள ஸ்டெரோல்ஸ் குர்செடின் மற்றும் சபோனின்கள் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

சரும பளபளப்பை அதிகரிக்கிறது :

வெங்காயத்தில் உள்ள சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் அல்லிசின் எனும் சல்பர் சேர்மங்கள் சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.

மேலும் இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி செப்டிக்காக செயல்படுகிறது. இது சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் முகப்பரு வராமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்கிறது :

உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் சிறந்த பங்கை கொண்டுள்ளன.

வெங்காயச் சாறு மற்றும் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

பாக்டீரியா எதிர் பண்பு :

வெங்காயத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஆய்வில் நறுக்கப்பட்ட பச்சை வெங்காயத்தில் பாக்டீரியா எதிர் பண்புகள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர பல் வலி, ஈறு வலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

வெங்காயம் பல் சிதைவு மற்றும் ஈறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகின்றன.

வெங்காயம் தீமைகள் :

வெங்காயம் பல மருத்துவ பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைளைப் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

வெங்காய சாறு இரத்த சர்க்கரையை குறைக்கிறது. ஏற்கனவே நீரிழிவு மருந்துகளை உட்கொண்டிருந்தால் வெங்காயம் சாறு இரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறைக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ளவும்.

இரத்தப்போக்கு கோளாறுகளை ஏற்படுத்தலாம் வெங்காய சாறு இரத்த உறைதலை குறைத்து இரத்த போக்கை அதிகரிக்கிறது. இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் வெங்காய சாற்றை உட்கொள்ளும் போது கவனம் தேவை. திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு முன் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு வெங்காயச் சாற்றைத் தவிர்ப்பதற்கு இது ஒரு காரணம்ஆகும்.

அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வெங்காயச் சாறு சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது அமில ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கலாம்.

Previous Post Next Post