யாரெல்லாம் பிஸ்தா பருப்பு சாப்பிடக்கூடாது?

பச்சை பிஸ்தாக்களில் அதிக சோடியம் இல்லை என்றாலும் (1 கப் பச்சை பிஸ்தாவில் சுமார் 1 மில்லிகிராம் உள்ளது), வறுத்த பிஸ்தா பருப்பில் பெரும்பாலும் உப்பு சேர்க்கப்படுகின்றது. ஒரு கப் உலர்ந்த வறுத்த பிஸ்தாவில் உப்பு சேர்த்து 526 மில்லிகிராம் சோடியம் உள்ளது. இதனால் அதிகப்படியான சோடியம் உடலில் சேர்ந்து உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற விஷயங்களுக்கு வழிவகுக்கும்.

உங்களுக்கு ஃப்ரக்டான் ஒவ்வாமைத்தன்மை இருந்தால் -- (இது ஒரு வகை கார்போஹைட்ரேட்டுக்கு ஏற்படுத்தும் மோசமான எதிர்வினை) -- பிஸ்தா உங்கள் வயிற்றைத் தொந்தரவு செய்யலாம். அப்படியானால், உங்களுக்கு வீக்கம், குமட்டல், வயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

மற்றபடி ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்கள் உப்பு குறைவான பிஸ்தா பருப்பை அளவோடு சாப்பிடுவது நன்மையே.

பிஸ்தாக்களைப் பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 1-2 கைப்பிடிகள் மட்டுமே சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.ஏனெனில் அவற்றில் கலோரிகள் மிகவும் அதிகமாக உள்ளன.

பிஸ்தா பருப்பு உண்பதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:

• அதிக அளவு நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம். இரண்டுமே ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

• அவை இருதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.

• பிஸ்தாக்கள் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் நிறைவுறா கொழுப்பு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. அவை உங்கள் இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

• அவற்றின் நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும். இந்த நார்ச்சத்து "நல்ல" பாக்டீரியாவுக்கு உதவுவதன் மூலம் உங்கள் குடலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

• அவை சத்தான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாக இருப்பதால் உங்கள் எடையை நிர்வகிக்க உதவும். இது ஒட்டுமொத்தமாக குறைவாக சாப்பிடவும், எடை குறைக்கவும் உதவும். பிஸ்தாக்களை அவற்றின் ஓட்டுடன் வாங்கினால், உடைத்து சாப்பிட வேண்டியிருப்பதால் மெதுவாக அளவுடன் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை!

• சில ஆய்வுகள் பிஸ்தா சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் (கிளைசெமிக் இன்டெக்ஸ்) அளவைக் குறைக்கிறது, மேலும் உங்கள் இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தொனியை மேம்படுத்துகிறது என்று காட்டுகின்றன

Previous Post Next Post