தினமும் ஒரு குவளை மாதுளை சாறு குடிக்கவும். உடலில் ரத்த அழுத்தம் கொழுப்பு நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
மன அழுத்தம் மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பூண்டு உண்ணுவதால் வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும். சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரைக்காய், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய் நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நாக்குப்பூச்சித் தொல்லை வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும். புதினா, தேன், எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாகி விடும். கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி பன்னீர் திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை விதைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை அளிக்கின்றது. தினசரி சிறு துண்டு அண்ணாச்சி பழத்தை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள் கண்களுக்கு நல்லது. பொன்னாங் கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நெருங்காது.