வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கடவுளுடன் தொடர்புடையது. எனவே எந்த நாளில் எந்த கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திங்கள்:
திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்திடலாம்.
செவ்வாய்:
ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.
புதன்:
விநாயகரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும்.
வியாழன்:
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாள்.
அதேபோல வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி (குரு) வழிபட உகந்த நாளாகும்.
வெள்ளி:
துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.
சனி:
சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபடலாம்.
ஞாயிறு:
நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.