நம்மிடம் இருக்கும் பணம் வளர வேண்டும், பல மடங்குகள் அதிகரிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது.
சிறுசேமிப்பு, சிக்கனம் என்பதெல்லாம் பணம் சேர்க்க உதவும் உண்மைதான். ஆனால் உங்கள் இடம் இருக்கும் பணத்தை வளர்க்காது.
அப்போ பணம்.வளர என்ன செய்ய வேண்டும்? அதற்கு.பல.வழிகள் இரூக்கிறது. நிச்சயம் உங்கள் பணத்தை கையில் வைத்திருந்தால் வளராது.. அதை ஏதேனும் ஒரு வழியில் முதலீடு செய்ய வேண்டும். என்னவெல்லாம் வாய்ப்புகள் உள்ளது என்பது கீழே:
- வங்கியில் சேமிப்பு
- ஃபிக்ஸட் டெபாசிட்
- அரசு வெளியிடும் பத்திரங்கள்
- பரஸ்பர நிதி
- பங்கு சந்தை முதலீடு
- தங்க முதலீடு
- ரியல் எஸ்டேட்
- வட்டிக்கு கடன் கொடுப்பது
- தொழிலில் முதலீடு
இதில் ஒவ்வொன்றிலும் பிளஸ் மைனஸ் உண்டு..நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இதில் எது சிறந்தது என்பது ஒருவருக்கு ஒருவர் மாறும். ஒரு நல்ல.பொருளாதார ஆலோசகர் உங்களுக்கு உதவ முடியும். நான் இருக்கும் வாய்ப்புகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
பொதுவான சில விதிகளை பணம் முதலீடு செய்யும்போது கவனத்தில் வைக்க வேண்டும்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.
மொத்த பணத்தையும் ஒரே முறையில் முதலீடு செய்ய கூடாது..பிரித்து பிரித்து பல்வேறு முறைகளில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைவு. ஒன்று நடடபட்டாலும் மற்றவை காப்பாற்றும்.
அதிக லாபம் அதிக ரிஸ்க்
அதிகமான லாபம் வரும் என்று பங்கு மார்கெட்டில் முதலீடு செய்வது, பக்கத்து வீட்டு காரனுக்கு 10 வட்டிக்கு கடன் கொடுப்பது இதெல்லாம் அதிக ரிஸ்க் உள்ளவை. லாபம் வர எந்த அளவிற்கு வாய்ப்பு இருக்கிறதோ அதே அளவில்.முதலுக்கே மோசம் என்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
அதிக வட்டிக்கு ஆசை பட்டு கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல் பணத்தை இழந்த பலரை அறிவேன். தனியார் பைனான்ஸ் கம்பனிகளையும் இதில் சேர்த்து கொள்ளுங்கள்.
ரியல் எஸ்டேட் முதலீடும் இப்படி பட்டதுதான். எப்போது உயரும், எப்போது குறையும் என்பது கணிக்க முடியாதது. நீங்கள் விற்க சென்றால் ஒரு விலையும் வாங்க சென்றால் வேறு விலையும் சொல்லும் வித்தியாசமான துறை. இதை நம்பி முதலீடு செய்து பணம் வளருமா என்றால் உறுதியாக சொல்ல முடியாது. ஏதேதோ சொல்லி இடத்தை நம்.தலையில்.கட்டி விடுவார்கள். நாம் விற்கும்போது நம்மை விட ஏமாளி சிக்காவிட்டால் நமக்கு நடடம்தான். பத்திர செலவு, வரி போன்றவற்றையும் கணக்கில் வைத்து முடிவெடுக்க வேண்டும்.
குறைவான லாபம் குறைவான ரிஸ்க்
அரசு வெளியிடும் இந்திர விகாஸ் பத்திரங்கள் போன்றவற்றில் .முதலீடு செய்தால் 0% ரிஸ்க்..ஆனால் பணம்.வளரும்.வேகமும் குறைவு. இதே போலத்தான் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட். இதன் வட்டிக்கு வரிபிடித்தம் வேறு உண்டு..ஆனால் ஒருமுறை முதலீடு செய்துவிட்டால் பிறகு அது பற்றி நீங்கள்.எந்த கவலையும் பட.வேண்டியதில்லை..அது தன் போக்கில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்
தெரியாத தொழிலில் முதலீடு செய்வது எப்போதுமே மிகவும் ரிஸ்க் ஆனது..நீங்கள்.அதன் நெளிவு சுளிவுகள் கற்று கொள்ள பணத்தையும் நேரத்தையும் இழக்க வேண்டி இருக்கலாம். இதில் போட்ட முதலீட்டை விட அதிக வருமானம் கிடைக்கலாம்.. ஆனால் அதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. உங்களுக்கு நன்றாக தெரியாத போது மற்றவரை நம்பி இது போன்று பண முதலீடு செய்தால் உங்கள்.பணம் வளரும் வாய்ப்புகள்.மிகவும் குறைவு.
பங்கு சந்தை முதலீட்டிற்கும் இது பொருந்தும். Commodity market போன்றவற்றில் அனுபவம் இல்லாமல் .பணம்.போடுவது பணம் வளர்க்க வெளைக்காவாது.
நகை என்பது முதலீடு அல்ல
தங்க நகைகள் வாங்கி பின்னர் தேவை.படும்போது விற்று கொள்லாலாம் என்பது போல முட்டா்தனமானது வேறு எதுவும் இல்லை..
காலையில் ஒரு கடையில் ஒரு மோதிரம் வாங்கி விட்டு மாலையில் அதே கடையில் அந்த மோதிரத்தை விற்று பாருங்கள். அப்போது தெரியும்.. நகை வாங்கும்போது அந்த கடையில் நீங்கள் குடித்த காப்பியின் விலை பல.ஆயிரங்கள் என்பது.
ஆனால் நீங்கள் paper gold என்னும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். செய்கூலி சேதாரம் போன்றவை இல்லாததால் ஒப்பீட்டளவில் இது லாபமானது.
எனவே எனது கருத்து, நீங்கள் உங்கள் பணத்தை பிரித்து கொஞ்சம் ரிஸ்க் அதிகமான துறையில் குறைவாகவும், ரிஸ்க் குறைவான அல்லது 0% ரிஸ்க் உள்ளவற்றில் அதிகமாகவும் முதலீடு செய்து வைத்தால் உங்கள்.பணம் வளர அதிக வாய்ப்புகள்.உண்டு.
இதிலும் குறுகிய கால முதலீடு, நீண்ட கால முதலீடு என்ற வகைகள் உண்டு.
எப்படி இருந்தாலும் உங்கள் முதலீடுகளை தொடர்ச்சியாக கவனித்து கொண்டே இருந்தால்தான் நல்லது..
பயிர் பார்க்காமல் கெடும் பணம் கேட்காமல் கெடும் என்று நம.முன்னோர்கள் அனுபவத்தில் சொன்னது 100 சதம் சரியானது.
பணமும் செடியும் ஒன்றுதான். தொடர் பராமரிப்பும் கவனிப்பும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பணம் வளரும்.