உடல் எடையை குறைக்க





உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ! வேறு என்ன நன்மைகளை தரும் தெரியுமா? பொதுவாக உடல் எடையை சீராக வைத்து கொள்ள க்ரீன் டீ பெரும் துணை புரிகின்றது. தினமும் காலையில் க்ரீன் டீ பருகுவதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியே தள்ளி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. இதை போலவே ப்ளூ டீயும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தற்போது இந்த டீயை எப்படி தயாரிக்கலாம்? என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : சங்கு பூ - சிறிதளவு தேன் - 1டீஸ்பூன் எலும்பிச்சை சாறு - 2 டீஸ்பூன் செய்முறை : க்ரீன் டீ தயாரிப்பது போன்றே இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடலாம். கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம். * குறிப்பு : கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயாளிகள் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி இதனை எடுத்து கொள்ளக் கூடாது. நன்மைகள் : தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது இந்த ப்ளூ டீ. புளூ டீயில் இருக்கும் 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கின்றது எடை அதிகமாக உள்ள வர்களுக்கு புளூ டீ பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு. குடற்புண் பாதிப்பு உள்ளவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக புளூ டீ உள்ளது. புளூ டீ அஜீரணத்தை குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது. புளூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.
Previous Post Next Post