நம் உடலில் ஏதாவது பிரச்னை வந்தால்தான் அந்த உறுப்பின் மீது கவனம் செலுத்துவோம். கண், இதயம், நுரையீரல் etc etc.
நாம் பொதுவாக அதிகம் கவனம் செலுத்தாத உறுப்பு எது என்றால் பாதங்கள்தான். ஆனால் நம் வாழ்வில் பாதங்களின் அன்பளிப்பு அற்புதமானது. நம் உடலின் மொத்த எடையையும் இரு பாதங்களே தாங்கி நிற்கின்றன. நம் வாழ்வின் இலக்குகளை நோக்கி, அவைகளை செயல்படுத்த, நம்மை எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்வதில் பாதங்களின் பங்கு போற்றுதலுக்குரியது. பாதங்களை முறையாக பாதுகாத்தல் அவசியம். சரியான காலணிகள், நடையில் நிதானம், ஓய்வு எல்லாம் பாதங்களுக்கு அவசியமானது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் இணையும் இடம் பாதங்களிலே. பாதங்களின் உட்புறத்தை 5 நிமிடம் கட்டைவிரல்களால் அழுத்தி, Massage கொடுப்பதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம், காந்த ஓட்டம் தடங்கலின்றி பாய்வதால், உடல் நலம் சிறக்கும். நாட்பட்ட நோய்கள் கூட கட்டுக்குள் வரும். அருட்தந்தையின் உடற்பயிற்சியில் கூட, பாதங்களின் உட்பாகம் முழுமையும் கட்டை விரல்களால் நன்கு அழுத்தம் கொடுக்கும் பயிற்சி உண்டு. பாதங்களை முன்னும் பின்னும் அசைவு கொடுப்பதும், மென்மையாக சுழற்றுவதும் போன்ற பயிற்சிகளும் உண்டு. Relexation பயிற்சி கூட, முதலில் பாதங்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இயற்கையின் அற்புத வடிவமைப்பு நம் பாதங்கள். எளிமையான பயிற்சிகளால் பாதத்தை முறையாக பாதுகாக்கலாம். உடல் நலம் காக்கலாம். கீழே உள்ள படம், பாதங்களில் எந்தெந்த பாகங்களில் அழுத்தம் கொடுத்தால், எந்த உடல் உறுப்பு நலம் பெறும் என்பதற்கான வரைபடம்.