உங்கள் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லையா? இதை மட்டும் செய்ய வேண்டும்.

 வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு, நீங்கள் வெளியில் வாகனத்தை எடுத்துச் செல்லும் போது, எல்லா நேரங்களிலும் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்கிறீர்களா?



இந்தியச் சட்டத்தின் படி, வாகன ஓட்டிகள் அனைவரும் அவர்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இனிமேல் நீங்கள் வாகனத்தை ஓட்டும் போது உங்கள் கைகளில் எப்போது டிரைவிங் லைசென்ஸை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும். உண்மையில் இந்த செய்தி நிச்சயமாகச் சிலருக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். உங்கள் கைகளில் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து, குறிப்பிட்ட சில ஆப்ஸ்கள் மூலம் வாகன ஓட்டுநர் ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பிப்பது செல்லுபடியாகும்.


இப்படி செய்தால் மட்டும் உங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் செல்லுபடியாகும் மக்களே

 மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,1989 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் (Amendment to the 1989 Motor Vehicles Act) அடிப்படையில் வாகன ஓட்டிகள் அனைவரும் எப்போதும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) அல்லது ஆர்சி (ரெஜிஸ்ட்ரேஷன் கார்டு) புக்கை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, வாகன ஓட்டிகள் அவர்களின் முக்கிய ஆவணங்களை எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் மூலம் தேவையான நேரங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் காண்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.


அரசின் உத்தரவுப் படி இது 100% செல்லுபடியாகும்

 உங்கள் ஊரில் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், இது போன்ற டிஜிட்டல் டைப் ஆவணங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், வழக்கம் போல் அசல் ஓட்டுநர் உரிமத்தைத் தான் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்பார்கள்" என்று நீங்கள் கூறலாம். ஆனால், அரசாங்கத்தின் மொபைல் ஆப்ஸ் வழியாக உங்கள் ஆவணங்களைக் காண்பிப்பது 100% செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் வழியாக காட்டப்படும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.


எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) ஆப்ஸில் எப்படி ஆவணத்தைச் சேர்ப்பது?

 சரி, இப்போது எப்படி உங்களுடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பது என்று தெரிந்துகொள்ளலாம். இந்த ஆவணங்களை நீங்கள் ஒரு முறை உங்கள் டேஷ்போர்டில் சேமித்து வைத்துக்கொண்டால் போதுமானது, அடுத்து எப்போது தேவையென்றாலும் உங்கள் எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் PIN அல்லது பாஸ்வோர்டை மட்டும் உள்ளிட்டு அதிகாரிகளிடம் காண்பித்துக் கொள்ளலாம்.

முதலில் எம்பரிவாஹன் (mParivahan) ஆப்ஸ் மூலம் உங்கள் ஆவணத்தை எப்படிச் சேமிப்பது என்று பார்க்கலாம்.

 


இதற்கு நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து கூகுள் பிளே ஸ்டோர் சென்று, அங்கிருந்து எம்பரிவாஹன் (mParivahan) ஆப்ஸை டவுன்லோட் செய்யுங்கள்.


அடுத்தபடியாக, எம்பரிவாஹன் ஆப்பை திறந்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரிஜிஸ்டர் செயல் முறையைப் பின்பற்ற வேண்டும்.


இந்த நேரத்தில் உங்களுக்கு ஒடிபி ஒன்று அனுப்பப்படும், அதை உள்ளிட்டு ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும்.


பின்னர் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் அணுகக் கிடைக்கும்.எதை முதலில் சேவ் செய்வது என்பது உங்கள் விருப்பம்

 


அதில் டிஎல் (DL) அதாவது டிரைவிங் லைசன்ஸ் அல்லது ஆர்சி (RC),அதாவது ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிக்கேட் (Registration Certificate) என்ற விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து அந்த உரிய ஆவணத்தைச் சேமித்துக் கொள்ளலாம்.


முதலில் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிக்க விரும்பினால் உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள டிஎல் நம்பரை உள்ளிடவும்.


பிறகு,எம்பரிவாஹன் ஆப்ஸில் உங்களின் விர்ச்சுவல் டிஎல்-ஐ (virtual DL) உருவாக்க ஆட் டூ மை டாஷ்போர்ட் (Add To My Dashboard) என்பதை கிளிக் செய்யவும்.


சேமித்த ஆவணங்களை எங்குச் சென்று பார்ப்பது?

 


பின்னர் உங்கள் பிறந்த தேதியை (DOB) உள்ளிடவும், இப்போது உங்கள் டிஎல் ஆவணம் ஆப்ஸின் டாஷ்போர்டில் சேர்க்கப்படும்.


அவசர நேரத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க விரும்பினால், நீங்கள் நேரடியாக ஆப்ஸின் டேஷ்போர்டை திறந்து ஓட்டுநர் உரிமத்தைக் காண்பிக்கலாம்.


இதேபோல் உங்கள் ஆர்சி புக் விபரங்களையும் நீங்கள் டேஷ் போர்டில் சேமிக்கலாம்.

Previous Post Next Post